தமிழ்நெறி விளக்கம் 7

    யாய்,  ஆவிசென்  றாற்பின்னை   யாரோ   பெயர்ப்ப   ரகலிடத்தே”,
“திரையுறை வார்புனற் சேவூர்ச் செருமன்னர் சீரழித்த,  உரையுறை   தீந்தமிழ்
வேந்தனு சிதனொண்  பூம்பொதியில்,  வரையுறை  தெய்வமென்  றேற்கல்லை
யேலுன்றன்    வாய்திறவாய்,  விரையுறை  கோதை  யுயிர்செலின்  யார்பிறர்
மீட்பவரே” (பாண்டிக்கோவை);     “காவிநின்    றேர்தரு    கண்டவர்வண்
டில்லைக்கண்  ணார்க  மலத்,  தேவியென்  றேயையஞ்  சென்றதன்  றேயறி
யச்சிறிது, மாவியன் றன்னமென் னோக்கிநின் வாய்திற வாவிடினென், ஆவியன்
றேயமிழ் தேயணங் கேயின் றழிகின்றதே”(திருச்சிற்-41.)
 
13.1காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி
பூவிரி சுரிமென் கூந்தலும்
வேய்புரை தோளு மணங்குமா லெம்மே”(18)
                 (களவியற்.. 28, யா. வி. 39, மேற்.)
 
    இதுவுமது.
 
14. “பெருமலர்ப் பிரிந்த திருமக ளம்மலர்
அருங்கவி னெய்தச் சென்று சேர்ந்தாங்
கிருங்கலத் தொன்மனை பொலியப்
பெருந்தகைத் தோளி பெயர்ந்தனை சென்மே”(19)

    என்பது தலைமகளை விடுத்தல்.(16)

3.தோழியிற் கூட்டம்-பகற்குறி

17.பாங்குணர் வையுற விரந்துகுறை யுறுதலும்
ஆங்கவள் வினாதலு மதியுட னாக்கலும்
துணிதலுஞ் சேட்பட நிறுத்தலுஞ் சுட்டிய
தறியேனறிவன் மறையே லென்றலும்
5. குறியா கூறலும் படைத்தன மொழிதலும்
அரிய ளென்றலு நீகூ றென்றலும்
நகைகொண் டாற்றலு நகாதுரை யென்றலும்
கையுறை *யெளிமை காட்டலு மெய்யுற
ஒவ்வா தென்றலு மவணிலை யுணர்ந்து
10.கொள்குவ னெனறலு மடன்மா கூறலும்
மற்றது விக்கலுங் கையுறை கோடலும்
விழைய வுணர்த்தலு நாணொடு நீங்கலும்
வலிதாகச் சொல்லிக் குறைநயப் பித்தலும்


    
1. யா. வி. 39, மேற்.
     *(பி - ம். ‘யொருமை”