ஒண்டொடியே - ஒளியை உடைய வளையை அணிந்தவளே 28
ஒத்தாழிசைக் கலிப்பா- கலிப்பாவின் வகைகளுள் ஒன்று 132
ஒப்பிலுவமை 229
ஒப்பு ஆர் பொருள் - (தனக்குத் தானே) ஒப்பாயுள்ள பொருள் 202
ஒப்புமறை உவமை 229
ஒப்புமைக் கூட்ட உவமை (220ஆம் பக்கத்தில் 'ஒப்பு உவமையும்' 'கூட்ட உவமையும்' என்றிருப்பதனை 'ஒப்புமைக் கூட்ட உவமை' எனத் திருத்திக் கொள்க) 225
ஒப்பு விதிரேகம் 247, 248
ஒருங்கியல் (புணர்நிலை அணி) 218, 266
ஒருங்குடன் தோற்றம் 252
ஒருதலைக் காமம் 118
ஒரு பொருட் பாட்டு 279
ஒரு போகு (இது கலிப்பாவின் வகைகளுள் ஒன்று; இஃது அம்போதரங்க ஒரு போகும், கொச்சக ஒரு போகும் என இரண்டு வகைப்படும். இதன் விரிவைத் தொல்காப்பியம் செய்யுளியலிற் காண்க.) 131
ஒருமை 78
ஒருமை ஒப்புத்துவிகு 50, 51
ஒருமை விதிரேகம் 247, 248
ஒருவழி ஒப்பினொருபொருள் மொழிதல் உவமை 229, 230
ஒரு வினைச் சிலேடை 260, 261
ஒளி 118
ஒளியிழையே - ஒளியை உடைய ஆபரணங்களை அணிந்த மாதே! 6
ஒள் வேல் கண்ணி - ஒள்ளிய வேல் போன்ற கண்களை உடையாள் 138
ஒறுக்கையினும் - வருத்துகையிலும் 224
ஒற்றுப் பெயர்த்தல் 279
ஒற்றுமை மொழி 231, 233
ஒற்றுவினை உரைத்தல் 108
ஒன்பான் - ஒன்பது 2
ஒன்றினொன்று அபாவம் 252
ஒன்னா-பகைத்த (ஒன்னாத என்பது ஈறு தொக்கு நின்றது; இஃது ஒன்றாத என்பதன் மரூஉ; மனம் பொருந்தாத என்பது பொருள்.) 147