"அதுவே,
காரண மென்பது கால மூன்றின்
ஆரணங் காகிய வறிந்த பொருண்மேல்
சீரினிற் செப்புஞ் செந்நெறி பெறுமே.
அதுவே,
இன்னதென் றின்னோ ருரைப்ப வதன்வழிப்
பின்னோ ருரைத்த திதுவெனக்
கிளவியொடு கெழூஉம் விளைவின் கண்ணே."
காலமாவது,
"ஆண்டே யயன மிருதுத் திங்கள்
பக்க நாளே கிழமை நாழிகை
அஞ்சுங் கலையே காட்டே முதலா
ஈண்டிதற் கேற்ப திதுவென வெடுத்துக்
காண்டக வுரைப்பது கால வுரையே."
அன்றியும் இறந்தகாலம், எதிர்காலம், நிகழ் காலமுமாம்.
இனிக் கருத்துரையாவது,
"கருத்தெனப் படுவது கருத்துறத் தெரியில்
அறித லறியாமை யையுற லென்னும்
முறையுளி நோக்கின் மூவகைப் படுமே."
என்றமையாலறிக. அவைதாம்,
"அறிந்தறி யாமை யறிந்தவை யையுறல்
அறியா தறித லையுற் றிலாமை
எனநனி வகுத்த வித்திறல் வகைத்தே."
இனி இயல்புரையாவது,
"இயல்பெனப் படுவ தியல்புழி யெண்ணில்
இன்னுழியா யின்ன தியன்றதிது வென்ன
இன்ன முரைப்ப தென்மனார் புலவர்."
விளைவாவது,
"அதுதான்,
இடையூ றின்மையும் இன்பப் புணர்ச்சியும்
நெடுநிலப் படாமையும்
கற்புங் காவலுங் கடனு நாணும்
இற்செறிந் திருக்கையும் இருஞ்சுரம் போதலும்
பாசறை முடித்தலும் பாத்தலின் விழவும்எனப்
பேசப் பட்டவும் பிறவும் போலப்
பரந்துமுன் பேசிய பயன்போற் றோன்றி
விரும்பியது விளைப்பது விளைவெனப் படுமே."