120

பாணமாவது, தூர்த்தனாதல் தலைவனாதல் தானுஞ் சொல்லி நின்றார் சொல்லையும் அனுவதித்துச் சொல்லிய ஐவகைச் சந்தியுள்ளும் கடைக்கண் சந்தியங்கம் ஒன்றாவது.

சல்லாபமாவது, ஒரு பொருண்மேற் பேசுவார் தலைமக்கள் இருவராய் ஓரங்கமாய் நிருபனைச் சந்தியொன்றாது நின்ற சந்தி நான்குடைத்தாவது.

வீழிணியாவது, கூத்தன் தலைமகனாய்த் தன் மடந்தைக்கு விடாக் கண்டவாறும் மன்னகரங் கண்டவாறுஞ் சொல்லுதலாய் அங்கம் ஒன்றாய் ஐவகைச் சந்தியுள்ளுங் கடைச்சந்தி அணையுமாறு சொல்லுவது.

உத்தாரமடங்கமாவது, மக்கள் பலரைத்தலைவராகப் பெற்றுப் பெரும்பொல்லாத பேருடைத்தாய்ப் பெண்களாலாற்றப்பட்டுச் சந்தியைந்துமுடையது.

1பிராசனச் சந்தியாவது, சுத்தமும் சங்கீரணமும் என இரண்டாம். சுத்தமாவது, தாக்காரை இகழ்ந்து வருவது. சங்கீரணமாவது, பாஷண்டன் தலைமகனாய்த் தோழியரே, கணிகையரே, தூதரே, அலிகளே, பேடியரே என்றிவரையுடைத்தாய்க் கடைக்கண் சந்தியின்றி அங்கமொன்றாவது.

சந்தியாவது, சந்தியும், சந்தியங்கமும் என இரண்டு வகைப்படும்.

அவற்றிற் சந்தி ஐந்து வகைப்படும். அவை முகமும், பயிர்முகமும், கர்ப்பமுகமும், வைரிமுகமும், நிருவாணமும் எனவிவை.

சந்தியங்கமாவன அறுபத்து நான்கு.

அவற்றுள், உவகேபம், பரிகரம், பரிநியாசம், விலோவணம், யுக்தி, பிராத்தி, சமாதானம், விதானம், பரிபாவனை, 2உச்சிரம்; உற்பேதம், கரண பேதம் என முகத்திலங்கம் பன்னிரண்டு.

விலாசம், பரிசர்ப்பம், விதூதம், சமம், நாபம், நமதூதி, பிரகமம், நிரோதம், பரியுபாசனம், வச்சிரம், புட்பம், உபநியாசம், வருண சங்காரம் இவை பயிர்முகத்திலங்கம் பதின்மூன்று.


1 "வடநூலார் சுத்த,  வைகிருத, சங்கீரணமென மூவகைப்படுத்துப."

2 "உச்சிர நீக்கிக் கரண பேதத்தைப் பேதம் கரணம் எனவுங் கூறுப" என்பன பழைய குறிப்பு.