இஃது இரண்டடியாய் ஈறு குறைந்து வந்த குறட்போலி.
1'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றா டொழாஅ ரெனின்.
2'கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்.
இவையெல்லாங் குறட்போலியெனக் கொள்க.'
சிறியகுறள் மாணி செய்குணங்க ளோதுவன்காண்.
இஃது ஓரடியான்வந்த குறட்போலி.
இனிச் சிந்தாவது,'
வீசின பம்பர மோய்வதன் முன்னா
னாசை யறவிளை யாடித் திரிவனே.
எனவும்,
'எடுத்த மாட மிடிவதன் முன்னா
னடுத்த வண்ணம் விளையாடித் திரிவனே.
எனவும் இவை இரண்டடியாய்த் தம்முள் அளவொத்து வந்தமையால்,சிந்தம் எனக்கொள்க.
'மீனாமைகாரேனம் வென்றியரி யென்றிவைமுன்
னானா னினைப்பதற்கன்பர்கண் டீர்நன்மை யாள்பவரே;
எனவும்,
3'கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு
முகாஅமை வல்லதே யொற்று.
எனவும் இவை ஈரடி ஒவ்வாது வந்தமையால்,சிந்துப் போலியாம் எனக் கொள்க. திருவள்ளுவப்
பயனெல்லாங் குறள் வெண்பா என்றமையால் அஃது குற்றமெனில், அற்றன்று; 'அவையெல்லாம் ஒரு
பெயராலே வழங்க வேண்டாவோ?' எனின், குண்டலகேசி விருத்தம், கலிவிருத்தம், எலிவிருத்தம், நரிவிருத்தம்
முதலாயுள்ள வற்றுட் கலித்துறைகளும் உளவாமாதலால், குற்றமாகாது. இவை
1. திருக்குறள், 2.
2. திருக்குறள், 1087.
3. திருக்குறள், 585.