"இற்குரம்போ லொப்பவருக் கொப்பவ ரென்றொட்டாப்
பொற்குளம்பி னூடு புனலினிடை--முற்கொணர்ந்து
வாரொடுங்கு மென்முலையை வாழ்க்கைக் கமைப்பரே
லாரிடம்பே ராகு மதற்கு."
என்றமையால் ஆரிட மறிக.
"தெய்வந் தொழுதுபெற்ற சேயிழையை யொப்புமையா
னெய்வந்த தீமுன்னா நேர்வதூஉங்--கைவந்த
வேள்வி யகத்து வினையான் விழைபொருளா
யாள்வதூஉந் தெய்வமண மாம்".
இதனால் தெய்வமண மறிக.
"முன்னை வினையின் முறையாற் களவியலாற்
கன்னியைக் கண்டுடன் காதலித்துப்--பின்ன
ருளநிக ழார்வ முரைத்தொத் துறுதல்
வளமிகுகாந் தர்ப்ப மணம்."
என்றமையாற் காந்தர்வமண மறிக.
"வில்லேற்றல் வேழமட றன்மெய் மதவலியாற்
கொல்லேற்றை நண்ணியே கொள்ளுதல்பொன்--னல்லாட்
கரியன வீத லசுர மசுர
ரரியன வாற்று மணம்."
என்றமையால் அசுரமண மறிக.
"பூந்துகிலான் வன்மைமே லிட்டுப் புதவடைந்து
பாய்ந்து வலித்துக்கைப் பற்றிக்கொண்--டேந்திழையை
யெய்தப் படுத லிராக்கதமா மென்பரே
மைதீர்ந்தார் சொன்ன மணம்."
என்றமையால் இராக்கதமண மறிக,
"மஞ்சிற் களித்தல் மயங்குதல் மாழாத்த
லஞ்ச லறிவிழத்தல் சாவுதலிற்--றுஞ்சின
மின்னை மறத்தால் விழைந்தகடு செய்வதே
பின்னைப் பிசாச மணம்."
என்பதனாற் பிசாசமண மறிக.
எழுத்தும் சொல்லும் அவ்வதிகாரங்களாலறிக. செந்துறை மார்க்கமும், வெண்டுறை மார்க்கமுமாவன: