நூனாடிய பதமாம்' என்பதனால், பிரகிருதிகளின் பின்பு கு என்னும் நாலாம் வேற்றுமைப் பிரத்தியம் வருவித்து உகரச் சாரியையை இடைப்படுத்துச் சந்தி காரியம் பண்ணிக் காரக பதமாக்கிக் கிரியா பதத்தோடுங் கூட்டிச் சாத்தனுக்கு மகனானான் என முடிக்க; 'முதல் வேற்றுமையின் உருவம் விளி வேற்றுமையொழித்து எங்கும் உறப் பெறுமே' என்றதனால், ஆறாம் வேற்றுமை உருபுக்கு முன்பாக எழுவாய் வேற்றுமை உருபுகளும் நிறுத்தி முடிக்க.
'ஆதார மேழினிற்கே தானா முழைவயின் பக்க லுழியில்கண் சார்பிறவும்' என்பதன் வரலாறு:-
நீர்க்கே விழுந்தான்.
சாத்தனுழை அறிவு நின்றது.
கொற்றன்வயிற்பொறையிருந்தது.
இராமன் பக்கல் நன்மை வதிந்தது.
தேவனுழிப் பெருமை தங்கிற்று.
எள்ளில் எண்ணெயுண்டு.
வீட்டின்கண் எலி புகுந்தது.
மாவினிடம் மாங்காய் பழுத்தது.
தேவதத்தனிடை அடக்கமெய்திற்று.
ஆலின்கீழ்ப் பசுக்கிடந்தன.
நீரின்மேல் நுரை எழும்பிற்று.
வேர்ப்புறந் தோல் செறிந்தது.
வீட்டின்முன் கோட்டமுளது.
காட்டினுட் புலி பாய்ந்தது.
வெளியின்பின் நீர் சூழ்ந்தது.
தேவதத்தன்வாய் அறிவு வளர்ந்தது.
என வரும்.
'முதல் வேற்றுமையின் உருவம் விளிவேற்றுமை யொழித்தெங்கு முறப்பெறுமே' என்பதனால்,
மலையாளர்பக்கற் சேவகஞ் செய்தான்.
நம்பனாரிடைப் பெருமையுளது.
என ஏழாம்வேற்றுமைப் பிரத்தியத்தின் முன் எழுவாயுருபு வந்தவாறு காண்க.