44

பொன்னை ஆசைப்பட்டார் வறியோர்.

என்புழி, கருமத்தைக் கருத்தா பற்றினமையின், பற்றுக் கருமமாயிற்று.

ஒழுக்கத்தை இகழ்வர் தீயோர்.

என்புழி, கருமத்தைக் கருத்தா விட்டமையால், வீட்டுக் கருமமாயிற்று.

மாச்சோறு உண்கின்ற சிறுக்கன் அதன்கண் வீழ்ந்த தூளியினைத் தின்றான்.

என்புழி, கருமமாய் நின்ற தூளி தின்ற சிறுக்கனால் வேண்டப்படாமையால், பற்றுக் கருமமன்று; இதனை அறிந்திலாமையின் தின்னலாகாது என்னுங் கருத்து அவன் பக்கல் உண்டன்றாகலால், வீட்டுக் கருமமன்று; ஆதலால், பற்றுக் கருமமும் வீட்டுக் கருமமும் அன்றி இருபுறக் கருமமாயிற்று.

வீட்டை எடுத்தான் தச்சன்.

என்புழி, கருமமாய் நின்ற வீடு மற்றொரு சொல்லான் அன்றித்தானே கருமம் என்னும் இடந்தெரிந்து நிற்றலால், தான் தெரி கருமமாயிற்று.

வீடு தச்சன் கட்டினான்.

என்புழி, கருமமாய் நின்றங் வீடு கருமம் என்னும் இடம் தானே தெரியாமையாலும், தச்சன் என்னுங் காரக பத்ததானும், கட்டினான் என்னுங் கிரியா பதத்தானுங் கருமமென்று அறியப்படுதலாலுந் தான் தெரியாக் கருமமாயிற்று; 'வாய்ச்சி கொல்லன் செய்தான்; தாலி தட்டான் செய்தான்' என்பனவும் அது.

கொற்றனை ஊர்க்குப் போக்கினான் சாத்தன்.

என்புழி, கொற்றன் தானே கருமமுமாய்ப் போதற்கிரியையைச் செய்வானுமாய் நிற்றலால், கருத்தாக் கருமமாயிற்று; 'இராமனை அறிவித்தான்; கண்ணனைப் பேசுவித்தான்' என்பனவும் அது.

பசுவினைப் பாலைக் கறந்தான்.

என்புழி, கருமமாய் நின்ற பசுவே பாலினைக் கறந்தான் என மற்றுமொரு கருமமாதலின், 1தீபகக் கருமமாயிற்று. 'மாணாக்கனை நூலை அறிவித்தான்; ஆசிரியனைப் பொருளை வினாவினான்' என்பனவும் அது.

தடுக்கின்கண் இருந்தான் கொற்றன்.


1. 'வடநூலார் துவிகர்ம காரகமென்பர்,' என்பது பழைய குறிப்பு.