பொருள்வயி னிற்ற லவ்வயி னிலையும்
இயல்வளி முற்றுதல்
கார்கண் டுரைத்தல் கனவி னரற்றல்
போர்வேற் கண்ணி புலம்புமென் றிரங்குதல்
தூது விடுதல் தூதெதிர் கோடல்
போதவிழ் கோதை புலம்புநனி தீர்த்தல்
கோவொரூஉ மொழிதல் தேரவண் வருதல்
ஆர்மலி தேரை யமர்ந்தவ னேறல்
பாகனைக் கடாவெனப் பன்மணி நெடுந்தேர்
வேக நிலைமையின் விரைந்துநனி கடாவுதல்
இல்லியல் மடந்தைய ரியல்புரங் கேட்டல்
நல்லியல் நெடுங்கொடி நன்னகர் காட்டல்
இறைவன் சேருத லெதிர்சென்று வணங்குதல்
பொறைமலி மடந்தையைப் புலவித்தலை யளித்தல்
பருநா ணோக்கிப் பயன்கண்டு மொழிதல்
செருவேற் கண்ணி சேக்கையிற் களித்தல்
முல்லை நல்லியாழ் முறைமையிற் கேட்டலெனச்
சொல்லிய பிறவுஞ் சொன்னதன் பொருளே."
"குடவரைக் குறிஞ்சியுங் குணகடல் நெய்தலுங்
கடவ தாகுங் களவிற் குரித்தே."
"இருதிணைத் தொழிலு மியன்று தம்முள்
ஒருதிணைக் கோத லொழிந்தன வியல்பே."
"நன்னில மருதமுந் தொன்னில முல்லையுந்
துன்னருங் கற்பொடு தோன்றுந் தொடர்ந்தே."
"இடைநிலைப் பாலை யிருபாற்கு முரித்தே
படர்கொடி முல்லையின் பாற்படு மியற்றே.
ஒருவயிற் றணத்தலும் பொருள்வயிற் பிரிதலுங்
கருதிய களவிற் குண்மை யானே."
இனிச் சுட்டு என்பது, இப்பாட்டுத் தன்மையைச் சுட்டிற்று; படர்க்கையைச் சுட்டிற்று; முன்னிலையைச் சுட்டிற்று என்றறிவது.
இடனாவது, அகவிடனும் புறவிடனும் என இரண்டு வகைப்படும். அகவிடனாவது, மனையும் வளாகமும் பற்றி வருவது. புறவிடனாவது, மலையும், பழனமும், சோலையும், கடலும், நெறியும், ஆறும் பற்றி வருவது.
இனிக் கிளவி என்பது, கூற்றெனக் கொள்க. அது,