|
இதுவுமது
|
|
|
103. |
+ஆங்குத்
தலைவன் பலபடி யானும் அலங்கரித்துப்
பாங்கிற் பொருந்தவப் பாட்டியற் பாட்டினை நன்குணர்ந்து
பூங்கற் பகம்போல் நவமணி யாடைகள் பொன்பொழிந்து
வாங்கிக் கவிமுறை வந்தனை செய்கை மரபென்பவே.
|
(உரை
I). எ - ன், பாட்டுடைத் தலைமகன் இயல்பு
உணர்த்..........று.
(இ - ள்). அவ்விடத்துப் பாட்டுடைத்
தலைவன்தனைப்
பலபடியானும் அலங்கரித்துச் சுற்றம் சூழ இருந்து பாட்டின் பரிசினை
யுணர்ந்து மற்றவர்க்குக் கற்பகம்போல் மணியும் பொன்னும் ஆடையும்
மகிழ்ச்சிபெற வழங்கிக் கவிமுறையை வாங்கி வந்தனை செய்து
விடுத்தலும் மரபென்று சொல்லுவர் புலவர் எ - று. (35)
|