|
பரிசில்
நல்காதார்க்கு உறுவது
|
|
|
104. |
+பரவிய
பாவலர் பாக்கொண் டவர்க்குப் பரிசிற்றிறம்
வரிசையி னல்கா தொழியினா னந்தமா மற்றவர்கட்
குரைசெய்த வெல்லாம் வசையா யுயர்ந்தோர் விரும்பலின்றித்
தரையினி னிற்கும் பெரும்பழி யாமென்று சாற்றுவரே. |
(உரை I).எ - ன், பரிசில் நல்காதவர்க்கு
வரும் பெயர்
இன்னதென்பதுணர்த்து.........று.
(இ - ள்). பாவலர்
உரைத்த பாக்கொண்டு அவர்க்கு
வரிசையிற் பரிசிற்றிறம் மனமகிழ நல்காது ஒழியின் அவர் முன்பு
புகழ்ந்துரைத்தன வெல்லாம் இகழ்ந்துரைத்த வசையாய் உலகின்
உயர்ந்தோராயினும் மகிழப்படாது, பூதலத்தின்கண் நிற்பதோர்
பெரும்பழியாமென்று பேசுவர் புலவர் எ - று.
முன்னொரு வர்க்கு
மொழிந்த செய்யுட்
பின்னொரு வர்க்குச் சாற்றில்
முன்னோன் பின்னே திருவு நீங்கி
வழிகிளர்ந் தோன்பாற் சேறன் மரபே |
என்பது மாமூலம்.
யாவ ராயினும்
இவ்வகை யேதன்
மூவகைக் காலத்து மொழிந்தனர் புலவர் |
என்பது செய்யுள் வகைமை.
பாடிய புலவன்
பரிசிற் றிறம்நீங்கிற்
கேடுதலைத் தருமே கேட்டோன் மருங்கினும் |
என்பது பருணர் பாட்டியல்.
பாடிய செய்யுட்
பலநாட் கிடப்பினும்
கேடென மொழிப கேட்போர் தமக்கே |
|
-திருப்பிரவாசிரியர்
தூக்கியல்.(36)
|
|