|
புறநடை
|
|
|
105. |
+இறப்ப வுயர விறப்ப விழிய இசைக்குஞ்செய்யுட்
டிறத்தன யாவையுந் தீதென் றுரைப்பர்செப் பாதொழிந்த
புறத்துள வாயினுந் தொன்னு னெறிமேற் புகலப்படும்
நிறத்திற் குவளையுங் காவியும் போலு நெடுங்கண்ணியே. |
(உரை. I) எ - ன், இவை யனைத்திற்கும் புறநடையாமாறு
உணர்த்.............று.
(இ - ள்.) பாட்டுடைத் தலைமகனுக்குரிய
வகையன்றி இறப்ப
உயர்வு வரினும் இறப்ப இழித்து உரைப்பினும் ஆனந்தமாம்; அன்றி,
இந்நூல் இயம்பாதன உளவாயினும் தொன்னூல்களில் துணிந்த
நெறியே தோற்றுவித்துக் கொள்வர் எ - று.
இறப்ப
வுயரினு மிறப்ப விழியினும்
அறத்தகை வழீஇய வானந் தம்மே |
என்பது அணியியல்.
சிறந்த மரபிற்
றேர்ந்தவ னறியப்
பன்னூல் வகுத்த பெற்றியி னோக்கி
ஏத முறாம லியனெறிப் பகுத்தல்
தீதில் காட்சித் தெளிந்திசினோர் கடனே |
என்பது பருணர் பாட்டியல்.
எழுத்தின் வழுவே
யெழுத்ததி காரத்தின்
இழுக்கி வரூஉ மியல்பிற் றென்ப
சொல்லின் வழுவே சொல்லதின் யாப்பிற்
சொல்லிய குற்றந் தோன்ற லாகும்
எழுத்தின் வழுவே தமிழ்நடை திரிவே
........................................................................
யாப்பின் வழுவே யாப்பின திலக்கணம்
கோப்ப வாராக் கொள்கைத் தாகும் |
எனவுரைத்தமை அறிந்து
புணர்க்கப்படும்.
ஈண்டும் இந்நூலிற் சூத்திரத்தன்றி வேறுபட்டனவெல்லாம்
உரையிற் கோடலான தந்திரவுத்தியின் வருவித்தா ரென்க.
இச்சூத்திரத்தின் மகடூஉ முன்னிலை முதலாகிய மிகைச்
சொற்களெல்லாம் செய்யுளைநோக்கி வந்தனவென்க. (37)
|