|
நாட்களுக்குரிய
எழுத்துக்கள்
|
|
|
13. |
அகர
முதனான்கும் கார்த்திகை மற்றவற் றின்னடைவே
உகர முதலைந்தும் 1பூராட மாமென ஓதுவர்காண்
ஒகர முதன்மூன்று மோருத்தி ராட முயிர்மெய்யினில்
ககர முதனான்கு மோணமென் றோதுவர் கற்றவரே. |
(உரை - I). எ-ன், மொழிதரு முதலெழுத்துக்கு உதாரணம்
ஆமாறு உணர்த்............று.
அ, ஆ, இ, ஈ இவை நான்கும் கார்த்திகை; உ, ஊ, எ, ஏ, ஐ,
இவை ஐந்தும் பூராடம்; ஒ, ஓ, ஒள இவை மூன்றும் உத்திராட
மெனக்கொள்க. க, கா, கி, கீ இவை நான்கும் திருவோணம் எ - று.
(உரை II). எ - து, நாட் பொருத்தமாமாறுணர்த்துகின்றது.
(பி
- ம்.). 1பூராட முத்திரா டம்மொழிந்த, ஒகர முதன் மூன்று
மேய்ந்த உயிரி லுயிர்மெய்யினில் (13)
|
|
|