|
இதுவுமது
|
|
|
15. |
*ஏய்ந்த சகர முதனா லெழுத்தும் இரேவதியாம்
ஆய்ந்த சுகர முதலைந் தெழுத்தும் அசுபதியாம்
பாய்ந்த சொகர முதன்மூன் றெழுத்தும் பரணியென்பர்
வேய்ந்த ஞகர ஞொகரஞா வான அவிட்டமின்னே. |
(உரை
I). ச, சா, சி, சீ இவை நான்கும் இரேவதி. சு, சூ, செ,
சே, சை இவை ஐந்தும் அசுபதி. சொ, சோ, சௌ இவை மூன்றும்
பரணி, ஞ, ஞா, ஞொ இவை மூன்றும் அவிட்டம் எ - று.
(பி
- ம்.) |
1
ஏய்ந்த சகர மிரேவதி நாண்முதல் மூன்றினுக்கு
வாய்ந்த வெழுத்தொரு நான்கைந்து மூன்றா
[மவற்றின்வர்க்கத்
தாய்ந்தஞ மூன்று மவிட்டமீ றாயின வஞ்சனத்தைத்
தோய்ந்து குழையைத் தொடருந் தடங்கட்
டுடியிடையே.
|
உரை
I உள்ள பிரதியிற் கண்டது இது. (15)
|