|
இதுவுமது
|
|
|
17. |
சொல்லும்
பகரத்து ளுத்தர நாண்முதன் மூன்று 1பற்றிச்
செல்லு மொருநான் கிரண்டாறு சென்றபின் மவ்வருக்கம்
புல்லு மகமிரு மூன்றுமூன் றாயிலி யம்2புயலும்
அல்லும் பொருங்குழ லல்லா தனபூரம் ஆயினவே. |
(உரை
II). எ - ன், ப, பா, பி, பீ இவை நான்கும் உத்தரம்.
பு, பூ இவை இரண்டும் அத்தம். பெ, பே, பை, பொ, போ, பௌ
இவை ஆறும் சித்திரை. ம, மா, மி, மீ, மு, மூ இவை ஆறும் மகம்.
மெ, மே, மை இவை மூன்றும் ஆயிலியம். மொ, மோ, மௌ இவை
மூன்றும் பூரம் எ- று.
(கு - ரை). உத்தர நாள் முதல் மூன்று
என்றது உத்தரம்,
அஸ்தம் சித்திரை நாட்களை. இவற்றுக்குரிய எழுத்துப் பகரத்துள்
முறையே நான்கு, இரண்டு, ஆறு (ஆகப் பன்னிரண்டும் ஆகும்).
பின் மவ் வருக்கம் - பகரத்துக்குப் பின் வரும் மவ்வருக்கத்தில்.
(பி
- ம்.) 1சுற்றிச் 2புகலும், அல்லுண் கருங்குழ
(17)
|