|
இதுவுமது
|
|
|
18. |
யகரத்துள்
யாவுத்தி ரட்டாதி யாமென் றறைவரின்னூம்
பகர்வுற்ற மூலம்யூ காரயோ காரத்தின் பாற்படுமால்
வகரத் தொருநான்கு ரோகிணி யேனை மகயிரமாம்
சிகரப் பணைமுலைச் சிற்றிடைப் பேரல்குற் றேமொழியே. |
(உரை
II). எ - ன், யா உத்திரட்டாதி; யூ, யோ இவை
இரண்டும் மூலம்; வ, வா, வி, வீ இவை நான்கும் உரோகிணி; வெ,
வே, வை, வௌ இவை நான்கும் மிருகசீரிடமாம் எ - று.
(கு - ரை.) மகயிரம் - மிருகசீரிடம். மேற் சூத்திரங்களில்
மொழிக்கு முதலாகும் எழுத்துக்களுக்கே நாள் கூறினார். (18)
|