நாட்பொருத்தம்
   
19. மொழிந்தவந் நாட்களை மூவொன்ப தாக்கி
                         அவற்றின்முன்னர்
இழிந்தன வொன்றுமூன் றைந்தே
                ழிரண்டுநாலாறெட்டொன்பான்
அழிந்தன வல்லன வட்டம ராசிவை நாசிகமும்
கழிந்தன நின்றன தாமியல் பாகக் கருதுவரே.

     (உரை I). எ-ன், வகுத்த நாட்களைத்தொகுத்துப் பொருத்தம்
கொள்ளுமாறு உணர்த்..........று.

     பாட்டுடைத் தலைமகன் இயற்பெயரெழுத்து நாளே தொடங்கி
முதற்கண் எடுத்த மங்கலச் சொல் முதலெழுத்து நாள் அளவும் வர
எண்ணி இவை கொள்ளப்படும்எ - று.

     பாட்டுடைத் தலைமகன் இயற்பெயரெழுத்து நாள் முதல்
மங்கலச் சொல்லெழுத்து நாளளவும் எண்ணினால் ஒன்று, மூன்று,
ஐந்து, ஏழு ஆகா. இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, ஒன்பது நன்றாம்.
இப்படி ஒன்பது ஒன்பதாகக் கழித்துப் பார்த்துக்கொள்வதன்றியும்,
பாட்டுடைத் தலைமகன் இயற்பெயரெழுத்து நாள் ராசிக்கு மங்கலச்
சொல்லின் நாள் ராசி எட்டாம் ராசியாய் வரின், அவை மங்கலமாக
வைக்கலாகாது. அன்றியும், பாட்டுடைத் தலைமகன்
இயற்பெயரெழுத்து நாளின்கால் தொடங்கி மங்கலச் சொல்லின்
நாளின் காலளவும் எண்ணினால் எண்பத்தெட்டாங்கால் வரின்
அவை வைநாசிகம் என்றறிக. அதுவும் மங்கலச் சொல்லுக்கு
ஆகாது எ - று.

     (உரை II). எ - து; இக்கவிக்கு முன் கூறிய ஆறு
கவியினாலும் சொல்லப்பட்டபடியே நாம நட்சத்திரம்

      ஆராய்ந்தறிந்துகொள்க.....................பத்தாம் நாள் ஆகில்
அனுசேனம என்று தள்ளப்படும். இப்படிப் பொருந்தப்பட்ட
மங்கலச்சொல் வைத்துக்கொள்க. இது நாட்பொருத்தம்.

     பாட்டுடைத் தலைவன் இயற்பெயரெழுத்து ராசிக்கும்
மங்கலச்சொல் ராசி எட்டாம் ராசியாகில் அட்டம ராசி என்னும்
குற்றமாம். பன்னிரண்டாம் ராசி தோயநாசிகம என்னும் குற்றமாம்.
வைநாசிகம் என்பது பாட்டுடைத் தலைவன் இயற்பெயரெழுத்து
ராசிக்கு எண்பத்தெட்டாங்காலில் வரும் நாள் எழுத்து.
இவையெல்லாம் களைந்து பாட்டின் முதற்சீர் வைத்துக்கொள்க.

     (கு - ரை). பாட்டுடைத்தலைவன் பெயரின்
முதலெழுத்துக்குரிய நட்சத்திரத்திலிருந்து செய்யுள் முதலெழுத்தின்
நட்சத்திரம் வரையில் எண்ணிவரும் தொகையை ஒன்பதால் வகுத்து
எஞ்சிய எண்களுக்கு இப்பொருத்தம் பார்க்க. இராசி: மேடம்
முதலிய பன்னிரண்டு ராசிகள். அசுவனி, பரணி, கிருத்திகையின்
முதல் கால் ஆக இரண்டேகால் நட்சத்திரம் (நாள்)
மேஷத்துக்குரியவை. இங்ஙனம் 27 நாட்களையும் இரண்டேகால்
இரண்டேகாலாகப் பன்னிரண்டு இராசிகளுக்கும் பகுத்திடுக.
அட்டம ராசி - எட்டாம் ராசிக்குரிய இரண்டேகால் நாள். (19)