கதிப் பொருத்தம்
   
20. வல்லினங் குற்றெழுத் தீறின்றி யேவரின் வானோர்கதி
மெல்லின மீறின்றி மேவு நெடின்முதல் 1நான்கும்வந்தால்
2சொல்லினர் மக்கட் கதியெனச் சொன்ன மொழிமுதற்கண்
புல்லு மெனினவை யெல்லாப் புலவரும் போற்றுவரே.

     (உரை - I) எ - ன், தேவகதியும் மக்கட் கதியும் ஆமாறு
உணர்த்..............று.

     (இ - ள்.) வல்லினத்து ஈறு நீங்கலான க, ச, ட, த, ப
என்னும்அஞ்செழுத்தும், குற்றெழுத்து ஈறுநீங்கலான அ, இ, உ, எ
என்னும் நான்கெழுத்தும் தெய்வ கதி. மெல்லினத்து ஈறு நீங்கலான
ங, ஞ, ண, ந, ம என்னும் அஞ்செழுத்தும், நெடின் முதலெழுத்தாகிய
ஆ, ஈ, ஊ, ஏ என்னும் நான்கெழுத்தும் மக்கட்கதி. இவ்விரு திறமும்
எடுத்த மொழி முதற்கண் வரின் அவை ஆம் எ - று.

     ஈண்டுச் சூத்திரம் செய்யவேண்டியது, இவை கடவுட் பிறந்தன,
மக்கட் பிறந்தன என்று அவையிற்றது சிறப்பும் சிறப்பின்மையும்
உணர்த்துதற்கு. குற்றெழுத்துக்களில் ஒகரத்தையும்,
நெட்டெழுத்துக்களில் ஐ, ஓ, ஓள என்னுமவற்றையும் ஒழிந்தன
வேண்டப்பட்ட வென்க.

     ஐகார முதல் நான்குயிரும் ஆண்டு ஆடூஉ மகடூஉ (சூ. 7)
என்று ஈண்டு விலக்கியதாற் சிறப்பின்றேனும் சிறுபான்மையும்
வரப்பெறுமென்பதாம். வல்லினம் மெல்லினம் ஈறின்றி என்றது
உயிர்மெய்யெனக் கொள்க.

     (உரை II). எ - ன், .............இவ்வாறு அறிந்து தேவதையைப்
பாடும் பிரபந்தத்துக்குத் தேவ கதியும் மனிதரைப் பாடும்
பிரபந்தத்துக்கு மக்கட்கதி எழுத்தும் வைத்துப் பாடுக.


     (பி - ம்.) 1 ‘னான்கினுக்குச்’ 2 ‘சொல்லுவர்’ (20)