இதுவுமது
   
21. பன்னொன்று பத்துயிர் யம்முதன் மூன்றுபன்
                                 னேழ்பதினைந்
தென்னு மவையே விலங்கின் கதியியம் பாவெழுத்துத்
தன்னை நரக கதியென்று சாற்றுவர் தாமுணர்ந்தோர்
1முன்னை மொழிக்கண் வரத்தகா வென்று மொழிவர்களே.

     (உரை I). எ - ன், விலங்கின் கதியும் நரககதியும்
ஆமாறுணர்த்........று.

     (இ - ள்).
பன்னொன்று பத்துமாகிய உயிரான ஓவும் ஒவ்வும்,
யம் முதல் மூன்றாகிய யரலவும், பதினேழ் பதினைந்தாகிய றவ்வும்
ழவ்வும் இன்னவே விலங்கின் கதியாம். இயம்பாவெழுத்துத் தன்னை
நரக கதியென்று சாற்றுவர் என்பது, ஐ, ஒள, ஃ, வ, ள, ன என்னும்
ஆறெழுத்தும் நரக கதியாம். இவை முதன்மொழிக்கண் வரத்தகா
எ - று.

     அவ்வாறும் நரககதி, வேண்டிற்றில்லை. பயனின்மை
பொருளாமென்று சொன்னாரெனக் கொள்க.

     (உரை II). ....................மெய் பதினெட்டும் ஆய்தமும் ஆகப்
பத்தொன்பதெழுத்தும் நரக கதி என்று சொல்லப்படும். இந்த
விலங்கின் கதி எழுத்தும் நரககதி எழுத்தும் பிரபந்தச் சாயையில்
முதற்சீர்க்கண் வைத்தலாகாது. வைப்பின் குற்றமாம்.

“மேவிய செய்யுளின் முதற்சீர்க் கண்ணே
விலங்கின் கதியும் நரக கதியும்
பாவியல் பாடப் பழியது முடியும்”

என்றார் 2தொல்காப்பியனார்.

     (கு - ரை). தன்னை : ஒருமை பன்மை மயக்கம். 


     (பி - ம்.) 1 ‘முன்னர்’ 2 ‘சொல்காப்பியனார்’ (21)