கணப் பொருத்தம்
   
22. நேரசை மூன்றிய மரன னிரைப்பின்பு நேரிரண்டு
சேர்வன திங்கள் நிரையசை மூன்றும் செழுநிலமாம்
நேரசைப் பின்பு நிரையிரண் டாய்வரின் நீர்க்கணமாம்
தேரிய லல்குற் றிருவே யிவைநல்ல சீர்க்கணமே.

     (உரை I). எ - ன், நற்கணநான்குமாமாறுணர்த் .............று.

     நேரசை மூன்று கூடியசீர் இந்திரகணம் ; நிரையசை முன்னே
நேரிசை யிரண்டு கூடியசீர் சந்திரகணம் ; நிரை மூன்று கூடியசீர்
நிலக்கணம் ; நேரசை முன்னே நிரையசை இரண்டு கூடியசீர்
நீர்க்கணம். இந்நான்கு சீர்க்கணமும் நன்மை தரும். இவற்றானே
முதற்சீர் மொழிக எ - று.

     என்னை,

  “இந்திர கணமே பெருக்கஞ் செய்யும்
சந்திர கணமே வாணாள் தரூஉம்
சீர்த்த நீர்க்கணம் பூக்கணஞ் செழுந்திரு
ஆக்கு மென்றாங் கறையப் படு்மே”

என்பது மாமூலம்.

  “நேரசை யாகவும் நிரையசை யாகவும்
சீர்பெற வெடுத்தல் சிலவிடத் துளவே”

என்பது இந்திரகாளியம்.

     இவை சிறப்பானமையின் முன்னெடுத்தோதினாரெனக் கொள்க.

     (உரை II) எ - து, கணப்பொருத்தமாமாறுணர்த்..........று.

     (கு - ரை.) தேமாங்காய் - இந்திரகணம். புளிமாங்காய் -
சந்திரகணம். கருவிளங்கனி - நிலக்கணம். கூவிளங்கனி -
நீர்க்கணம். (22)