25. உன்னுந் தசாங்க மொருசீ ரதனு ளுரைப்பதன்றிப்
பின்னின்ற சீரொடு சேர்ந்து பிளவு படிற்பிழையாம்
இன்னும் மவைதாம் புணர்மொழி யாயின் இயல்புபெறும்
மின்னும் வெளியுந் துடியு நிகரிடை மெல்லியலே.

     (உரை I). எ - ன், தசாங்கங்கட்கு எய்தியதோர் நன்மை
உணர்த்........று.

     மன்னர் இயற்பெயருக்குத் தசாங்கம் ஒரு சீரினுள்
உரைப்பரென்பது : “பிளந்து சீரிற் பெய்யினும் வரையார், புணர்ந்தே
மொழிவ ராதலாலே.” பாட்டுடைத் தலைமகன்றன் தசாங்கமாகிய
பத்தும் ஒரு சீர்க்கண் அல்லது அறுபடுமாயின் அவை குற்றமாம்.
அவையே புணர்மொழிப் பெயராயின் மொழியிறுதிச்சீர் நிற்கப்
புணர்ப்பினும் குற்ற மாகாது எ - று.

     (உரை II). தசாங்கமென்று சொல்லப்பட்ட மலை......ஆணை
என்னும் பத்துச் சொல்லும் பிரபந்தச் சாயையில் வைத்துப்
பாடுமிடத்து ஒவ்வொன்று ஒவ்வொரு சீரிலேயே வைத்துப் பாடுவது
உத்தமமாம். இப்படி அமையாமல் இரண்டு சீரோடு கூடிப் பிளவுபட்டு
வரிற் குற்றமாம் எ - று.

     (கு - ரை.) இதுவும் முன் சூத்திரமும் உரை Iல் முறையே 24,
8 ஆம் சூத்திரங்களாகக் காணப்படுகின்றன. அவ்வுரையில்
‘உன்னுந்தசாங்க’ (சூ. 25) என்றதனோடு பொருத்தவியல் முற்றுப்
பெற்றுள்ளது. இயலின் ஈற்றில் உரையாசிரியர், ‘இவ்வோத்து முதன்
மொழிக்கண் வருவனவை யிற்றுக்கு இலக்கணம் ஆராய்தலின்
முதன்மொழி யோத்தென்னும் பெயர்த்து ; இதனுள் தசாங்க வியலும்
ஆராய்ந்த தென்னையோ வெனின், முதன் மொழி வந்த வாற்றானே
பெயர் பெறுதல், நூல் நெறியாய்ப் பொதுச் சொற்றலைமையானும்
பேர் பெறுதலுந் தக்கதெனக் கொள்க’ என்று குறித்துள்ளார்.(25)