|
இதுவுமது
|
|
|
.98. |
இருபதிற்
றாண்டினி லேறி யெழுபதி லேறலின்றி
வருபரு வத்தவர் வன்பிணி யில்லவர் மற்றுறுப்பில்
ஒருகுறை வற்றவர் நாற்கவி வல்லவர் ஓங்கறத்தின்
பரிசுடை யாளர்கள் செய்யுளின் பாடல் பகர்பவரே, |
(உரை
I). எ - ன், உரைத்த கவிகட்குரிய குணங்கள் இவை
யென்பது உணர்த்..........று.
(இ - ள்). இருபதிற்றாண்டினில் ஏறி
எழுபதில் ஏறலின்றி,
உறுப்பிலொன்றும் குறைவின்றி, ஆசு மதுரம் சித்திரம்
வித்தாரமென்னும் நான்கு கவியும் உரைப்போர், அறநெறியின்
பரிசுடையோராய் இருப்போர் யாவர், அவர் செய்யுட் செய்யும்
திறத்தவர் எ - று. (30)
|