கலம்பகம்
   
33. மூல மொருபோகு வெண்பாக் கலித்துறை முன்னுறுப்பாய்
ஏலும் புயத்தோடம் மானைபொன் னூசல் இயமகம்விற்
கோல மறங்குறஞ் சித்துநற் கைக்கிளை 1கொண்டறூது
கால மதங்கி களிசம் பிரதம் கலம்பகமே.

     (உரை - I) எ - ன். கலம்பகமாமாறுணர்த்..................று.

     மூலம் ஒரு போகுவந்து அதன் பின்பு வெண்பாக் கலித்துறை
வந்து பின்னர் உறுப்பாகிய பொருள்கள் மேல் செய்யுள் வருவது
கலம்பகம். முற்றும் இவையன்றிப் பிற உறுப்புக்களும் வரும்.

“அன்னவன் தன்னைச் சாற்றி டினும் மறையவர்
முன்ன ரிடைநிலைப் பாட்டினும் மொழிவர்
சொன்ன கடவுட டொழுதகப் பாவில்”
 
- செய்யுள் வகைமை.

      [மெரஞ்செய்த தேமெனலவ்வாறுள்ள வருகவென்ற தல்லது
அவருரை நூன்முறையே நன்றென்பது கருதி யென்பது.]

     (உரை II). எ - து. கலம்பகமென்னும் பிரபந்தமாமா
றுணர்த்...........று.

     மூலமொருபோகென்பது முதலெடுக்கப்பட்ட செய்யுள் ஒரு
போகென்பது; அது கலம்பகமென்னும் பிரபந்தத்துக்கு முன்
வைக்கப்படும். அது இரண்டடி எதுகையாய் வைத்து
நாலடியினாகுதல், ஆறடியினாகுதல், கொச்சகக் கலிப்பாவில்
வேறுபடுத்தித் தெய்வ வணக்கம் பாடி அதன்பின் ஒரு வெண்பா,
அதன் பின் ஒரு கலித்துறை, அதன் பின் விருத்தம், சந்த
விருத்தம், புயவகுப்பு, அம்மானை, ஊசல், இயமகம், காலம், மறம்,
குறம், சித்து, கைக்கிளை, மருட்பா, தூது, மதங்கி, கழிபடர்கிளவி,
உடன் போக்கு, வருத்தம், மெய்ப்பாடு, களி, சம்பிரதம் இவை
முதலாகிய வனப்பின் திறமெல்லாம் வைத்துப் பாடுவது
கலம்பகமென்னும் பிரபந்தமாம் எ - று.

     சம்பிரத மென்பது இந்திரசால முதலாயின வித்தை.

     (கு - ரை)
 இயமகம் - மடக்கு. விற்கோல் மறம் - வில்
வீரத்தையுடைய மறம். கலம்பக உறுப்புக்கள் பதினெட்டென்று
கூறுவாரு முண்டு. இவற்றையன்றி வேறு பல உறுப்புக்களும்
வந்துள்ளன. இவ்வுறுப்புக்களின் இலக்கணங்களை யெல்லாம் கலம்பக
உரை நூல்களிற் கண்டு கொள்க.

     பகரங்களுக்கிடையே உள்ளதன் கருத்து விளங்கவில்லை.


     (பி - ம்.) 1 ‘ கொண்டலின்றூது ’ (8)