|
கலம்பகத்துப்
பயிலும் செய்யுள்
|
|
|
34. |
சொன்ன
கலம்பகந் தொக்கவச் செய்யுன் துடியைவென்ற
மின்னிடை வெண்டுறை வெண்பா 1வகுப்பக வல்விருத்தம்
இன்னிசை 2யாசிரி யம்மா சிரிய விருத்தமெல்லாம்
3மன்னு மருட்பாவஞ் சித்துறை வஞ்சி விருத்தமென்னே |
(உரை
I). எ - ன், கலம்பகச் செய்யுளையுணர்த்............று.
வெண்டுறையும் வெண்பாவும் வகுப்பாகிய வண்ணமும்
இன்னிசை வெண்பாவும் ஆசிரியப்பாவும் ஆசிரிய விருத்தங்களும்
மருட்பாவும் வஞ்சித்துறையும் வஞ்சி விருத்தமும் என்னும் இவை
கலம்பகத்துக்கு இசைந்த செய்யுள் எ - று.
நான்கு
பாவும் இனமு மயங்கி
ஆன்ற பொருளிலும் வருவது கலம்பகம் |
என்பது முள்ளியர்
கவித்தொகை.
(உரை II) எ - து. முன் சொன்ன உறுப்புக்களுடனே
கலம்பகம் பாடுமிடத்து இடையிடையே வெண்பாவும்...................
.......மருட்பாவும் தாழிசை இன்னிசையும் இவை முதலாகிய பல
செய்யுட்டிறமும் கலந்து வைத்து அந்தாதியாகப் பாடுவது கலம்பகம்
எ - று.
இந்தப் பிரபந்தம் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும்
முடிபுனைந்த மன்னருக்குமாம். குறுநில மன்னருக்காகாது. பாடிற்
குற்றம் உண்டாம்.
(பி
- ம்.) 1 வகவல் கலிவிருத்தம் 2 யெண்ணிய
வண்ணம்
வகுப்பொடு தாழிறையும் 3 மின்னு, (9)
|