|
ஒலியந்தாதி,
பன்மணிமாலை
|
|
|
39. |
ஈட்டிய
வீரெண் கலைவண்ணச் செய்யுள்
இயைந்தமுப்பான்
கூட்டிய 1நீடொலி யந்தாதி கூறும் கலம்பகத்தின்
2ஆட்டிய வம்மனை யூச லொருபோகும் 3அற்றுவந்தாற்
பாட்டியல பன்மணி மாலையென் றோதுவர் பாவலரே. |
(உரை - I).
எ - ன், ஒலியந்தாதியும் பன்மணி மாலையும்
ஆமாறுணர்த்.........று.
(இ - ள்). பதினாறு கலை வகுத்த ஈரொலி
வண்ணம் முப்பது
கூடி வருவது ஒலியந்தாதியாம்; முன் சொன்ன கலம்பகத்தில்
அம்மானையும்ஊசலும் ஒருபோகும் ஒழிந்து ஏனையவெல்லாம்
வருவது பன்மணி மாலையாம் எ - று.
ஒலியந்தாதியையே ஒரு சாரார் பல்சந்த மாலையென்று
அடக்குவர். வண்ணமென்பதும் வகுப்பென்பதும் ஒன்றென்று
சொல்லுவர். அஃது ஆசிரிய விருத்தம் ஆதலும் [என்று] அறிக;
ஒரு சாரார் அளவியற் றாண்டகமென்ப.
இவையெல்லாம் அந்தாதி மண்டலித்து முடிதல் அதிகார
வசத்திற் கொள்க.
(உரை II). எ - து, பதினாறு கலை ஓரடியாக
வைத்து, இப்படி
நாலடிக்கு அறுபத்து நாலு கலை வகுத்து, வண்ணமுங் கலையும்
வைப்பும் தவறாமல் அந்தாதியாக முப்பது செய்யுள் பாடுவது
ஒலியந்தாதி என்று சொல்லப்படும்; (அம்மானை) ஊசல், ஒருபோகு,
(இன்றி) வெண்பா வெள்ளொத்தாழிசையும், ஆசிரியப்பா
ஆசிரியத்தாழிசையும் கலிப்பா கலித்தாழிசையும், வஞ்சிப்பா
வஞ்சித்தாழிசையும் அந்தாதியாகப் பாடிக் கடைமுடிவிலே வெள்ளை
விருத்தம் ஆசிரிய விருத்தம் கலிவிருத்தம் வஞ்சிவிருத்தம் இப்படி
நூறு பாடப்படுவது பன்பணிமாலையென்று வழங்கப்படும் எ - று.
(கு - ரை). அளவிற்றாண்டகம் என்பாருள் (உரை 1)
பிரபந்தத் திரட்டுடையார் ஒருவர்; மூவெட்
டிரண்டெழுத்தாய்
மூன்றடிநான்காய்ச் சந்தப், பாவதன்மீத் தாண்டகமுப்
பானாக-மேவலொலி யந்தாதி (க. 74.) பாட்டியல் - பிரபந்தம்;
தற்சிறப். 1. கலம்பக உறுப்புக்களுள் ஊசலையும் ஒருபோகையும்
நீக்கி அம்மனை உள்பட மற்றெல்லா உறுப்புக்களும் வருவது
பன்மணி மாலை என்று பிரபந்தத் திரட்டுக்
கூறும்; ஊசலொரு
போகொழிய ஓதுங் கலம்பகப்பா, வாசமுறும் பன்மணி மாலையம்.
(க. 14.)
(பி
- ம்) 1 நீட்டொலி 2 வாட்டிய 3
மற்றதினற் (14)
|
|
|