|
அலங்கார
பஞ்சகம், கைக்கிளை
|
|
|
42.
|
வெண்பாக்
கலித்துறை வேறா சிரியம் விருத்தம்வண்ணம
பண்பால் 1வருவ வலங்கார பஞ்சகம் ஆம்2பகர்ந்த
நண்பா லொருதலைக் காம நவின்ற விருந்தம்வந்தாற்
பெண்பால் 3வரினவை கைக்கிளை யாமென்று பேசுவரே. |
(உரை
I). எ - ன். அலங்கார பஞ்சகமும் கைக்கிளையும்
ஆமாறுணர்த்........று.
(இ - ள்). வெண்பாவும் கலித்துறையும்
ஆசிரியப்பாவும்
ஆசிரிய விருத்தமும் வண்ணமும் என்னும் ஐந்தும் வருதல்
அலங்கார பஞ்சகமாமெனக் கொள்க.
கைக்கிளை
தானே கருதும் விருத்தம்
ஐந்து மூன்று மாகவும் பெறுமே. |
|
-செய்யுள்
வகைமை.
|
கைக்கிளை தானே மூன்று பாட்டாய் வருதலாம்; அலங்கார
பஞ்சகத்தைப் பஞ்சாலங்காரமென்று உரைப்பாருமுளர் எ - று.
(உரை II).
எ - ன், வெண்பாவும் கலித்துறையும்
ஆசிரியப்பாவும் ஆசிரிய விருத்தமும் வண்ணமும் இவ்வகையே
மாறி மாறி [நூறு] அந்தாதியாகப் பாடுவது பஞ்சக அலங்காரமென்று
சொல்லப்படும் எ - று.
இவையிற்றைத் தனித்தனியே முப்பது முப்பதாக ஒரு தலைக்
காமமாகப் பாடுவது கைக்கிளை என்று வழக்கப்டும் எ - று.
(கு - ரை). ஐந்து விதச் செய்யுள் பயின்று
வருதலின்
பஞ்சகமாயிற்று. இவை மாறி மாறி அந்தாதித் துறையில் வரும்.
கைக்கிளைப் பிரபந்தத்தின் செய்யுட்டொகை நூலுக்கு நூல்
வேறுபடுகிறது.
(பி
- ம்.) 1 வரும்பா 2 பயந்த 3
வருமவை (17)
|