பாதாதி கேசம், கேசாதி பாதம், அங்கமாலை
   
43. கடிதலில் லாக்கலி வெண்பாப் பகரும் அவயவங்கள்
முடிவது கேசமக் கேச முதலடி ஈறும்வந்தாற்
படிதிகழ் பாதாதி கேசமுங் கேசாதி பாதமுமாம்
1மடிதலில் வெண்பா விருந்தம் பலவங்க மாலையென்னே.

     (உரை I). எ - ன். கேசாதி பாதமும் பாதாதி கேசமும்
[அவயவங்கள் வெண்பா மரபும்]? உணர்த்......................று.

     (இ - ள்). கலிவெண்பாவினாற் பாதமே தொடங்கிக்
கேசாந்தமாய்வரிற் பாதாதி கேசமாம்; கேசமே தொடங்கிப்
பாதாந்தமாய்வரிற் கேசாதி பாதமாம்; வெண்பாவானும்
விருத்தங்களானும் வருவது அங்கமாலையாம் எ - று.

     (உரை II). எ - து....................பாதாசிகேசப் பிரபந்தமென்றும்
கேசாதிபாதப் பிரபந்தமென்றும் சொல்லப்படும். வெண்பாவினாலே
நூறும் ஐம்பதுமாக உறுப்புக்களைச் சிறப்பித்துப் பாடுவது
அங்கமாலையென்று வழங்கப்படும் எ - று.

     (கு - ரை) தெய்வங்களுக்குப் பாதாதி கேசமும்
ஏனையவர்களுக்குக் கேசாதி பாதமும் கூறுதல் மரபென்பர்.


     (பி - ம்). 1 ‘முடிதலில் வெண்பாவீ ரைம்ப தவையங்க’ (18)