பாதாதிகேசம் முதலியவற்றுக்கு உறுப்புக்கள்
   
44. அகங்கா லுகிர்வீரன் மீகால் 1பரடு கணைமுழந்தாள்
2மிகுங்கா னிதம்பமு முந்தியுதர மரை முலையும்
நகஞ்சார் விரலங்கை முன்கைதோள் கண்டம்
                                முகம்நகைவாய்
நகுங்கா திதழ்மூக்குக் கண்புரு வம்நெற்றி தாழ்குழலே.

     (உரை I)
எ - ன், ஓதிய பாதாதி கேசத்துக்கும் கேசாதி
பாதத்துக்கும் உறுப்புக்கள் இவையென்பது உணர்த்.........று.

     உள்ளங்கால், உகிர், விரல், புறங்கால், பரடு, கணைக்கால்,
முழந்தாள், குறங்கு, அல்குல், கொப்பூழ், வயிறு, அரை, உயர்முலை,
உகிர், விரல், உள்ளங்கை, முன்கை, தோள், கண்டம், முகம்,
முறுவல், வாய், காது, இதழ், மூக்கு, கண், புருவம், நெற்றி, குழல்
என்னும் முப்பத்திரண்டு (?) உறுப்பும் பாடற்கு இசைந்தனவே
எ - று.


“அகத்திய னுதலிய பல்பொருள் வகையான்
அகவல் வஞ்சி யாமிரு பாவினும்
அவைவரத் தொடுப்ப தவயவ மாலை
அதுகலி விரவினும் வரையா ராண்டே.”

என்பது பொய்கையார் பாட்டியல்.

    
(உரை II).
எ - து.......................அகங்கால் முதலாகக் குழல்
ஈறாகச் சொல்லப்பட்ட இவ்வுறுப்பனைத்தும் குறையாமற் சிறப்பித்து
முன்சொன்ன பாதாதிகேசப் பிரபந்தம் பாடப்படுவது எ - று.

     (பி - ம்.) 1 ‘பரட்கணைக்கால்’ 2 ‘மிகுங்காலுண் டாயிடை
கொப்பூழ் வயிறுயர் வெம்முலையாய்’ (19)