|
உலா,
தூது குழமகன்
|
|
|
45. |
தெருவினிற்
பேதை முதலெழு வோர்கள் 1திறத்துவகை
ஒருவனை யேத்துங் கலிவெண்பா தூதுலா ஒண்டொடியாய்
2மருமலர்க் கையிற் குழமகன் மேல்வைத்த மன்னவர்க்குத்
தருகலி வெண்பாக் குழமக னாமென்று 3சாற்றுகவே. |
(உரை
I). எ - ன், உலாப்புறமும் குழமகனும்
ஆமாறுணர்த்...........று.
(இ - ள்). தெருவின்கண் பேதை பெதும்பை
மங்கை
மடந்தை அரிவை தெரிவை பேரிளம்பெண்ணென ஏழும் வழுவாது
வேட்டோர் தமக்காக்கலும் காவலர் தமக்கும் உரிமை களவென
உணர்தல் வேண்டுமென்ப. பேணுதகு சிறப்பிற் பெண்மக வாயின்,
மூன்றா மாண்டின் மொழிகுவ குழமகன்.
(உரை II). எ - து. எழுவகைப் பருவத்துப்
பெண்களும்
தெருவினில் திருவுலாப்புறத்து வருகிறவனைக் கண்டு மயங்கி
மயலெய்தியதாகக் கலிவெண்பாவினாலே கூறுவது உலாவென
வழங்கப்படும். தூது பாடுவதும் குழமகன் பாடுவதும் இக்கலிவெண்பா
வெனப்படும் எ - று.
(பி
- ம்.) 1 டிறத்துக்கமை 2 வருமகற் 3
சாற்றுவமே (20)
|