|
மடல்
|
|
|
47.
|
பொருளறம் வீடு பழித்தின்ப 1மேபொரு
ளாக்கிநல்லார்
2அருள்பெறு வேட்கை மடன்மிக வூர்தலிற்
3பாட்டுடையோர்க்
குரிதரு பேரிற் பெயருக் கிசைந்த எதுகையினால்
வருகலி வெண்பாத் தனைமட லாக வகுத்தனரே. |
(உரை I). எ - ன், மடலாமாறுணர்த்.........................று.
(இ - ள்.) அறம் பொருள் வீடென்னும்
மூன்றையும் பழி்த்துக்
காமமே பொருளாக அரிவையர் அருள் பெறும் வேட்கையினால்
மடலூர்வலென்னும் பொருள் பாட்டுடைத் தலைமகன்
இயற்பெயராகிய அந்த எதுகை வகுத்து ஆக்கிய கலிவெண்பாவை
மடலென்றுரைப்பர் வண்டமிழ்ப் புலவர் எ - று.
(உரை II). எ - து. அறம், பொருள்,
வீடு என்ற மூன்று
காரியங்களையும் பழித்து, இன்பமே பொருளாக்கி, இந்த இன்பத்துக்
கிடமான சிறப்பினையும் வைத்துப் பாட்டுடைத் தலைமகன்
பேருக்கிசைந்த எதுகை [யினாலே ஏதுவாக] வைத்துக்
கலிவெண்பாவினாலே, தலைமனிரந்து குறைபெறாது மடலேறுவதாய்,
ஈரடி யெதுகை வரப்பாடுவது மடலென்று சொல்லப்படும் எ - று.
(கு - ரை). இந் நூலைப் போலவே பிரபந்தத்திரட்டும்
வச்சணந்தி மாலையும் மடல் என்றே கூறும்; சில நூல்கள்
வளமடல், உலாமடல் என்று கூறும், பெண்கள் மடலேறுவதாகக்
கூறும் மடல் நூல்களும் உள்ளன.
(பி
- ம்.) 1 மெய்ப்பொரு 2 மருள்பெறு
3 பாட்டுடை
யோரிரு பொருளாகவவர் பேருக் கேய்ந்த (22)
|
|
|