|
ஆனைத்
தொழில்
|
|
|
49.
|
பிறந்த நிலங்குல மோக்க மளவு பிராயமெழில்
சிறந்தமாக் கோபக் 1கிரமத்தில் விட்ட கதிர்சினத்தால்
இறந்துயிர் கோடல் செயக்கண் டிறைகந் தினிற்பிணித்தல்
உறைந்திடும் வஞ்சி யுரமுடை யானைத் தனித்தொழிலே |
(உரை I).
எ - ன், ஆனைத் தொழிலாமா றுணர்த்...................
............று.
(இ - ள்). ஆனை பிறந்த தேசமும், அதன்குல
நன்மையும்,
தனது ஓக்கமும், அளவும், பிராயமும், கோபக்கிரமத்தால் அதனை
நிலைநின்று நீக்கியவாறும், அது சினமிகுதியாற் கொலை
புரிந்தவாறும் கூறிப் பின்பு அரசன் கந்தினை யணையெனச்
சேர்த்தவாறும் உரைக்கும் வஞ்சி யானைத் தொழிலாம் எ - று.
(உரை II). எ - து...................ஆசிரிய
விருத்தமாக முந்நூறு
பாடப்படுவது ஆனைவிருத்தமென்றவாறு.
(கு - ரை). ஓக்கம்-உயர்ச்சி, கந்து
- கட்டுத் தறி. இறந்து -
வரம்பு கடந்து. இறை - அரசன். மதங்கொண்டு திரியும் யானைகளை
அடக்குதல் மன்னர்க்குரிய சிறந்த லட்சணங்களுள் ஒன்றென்பது மணிமேகலை,
பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய நூல்களால்
தெரிய வரும்.
(பி
- ம்.) 1 கிரமத்தி லெட்டாங்கத் துச்சினத்தால் (24)
|
|
|