|
நயனப்பத்து,
பயோதரப்பத்து, பொன்னூசல்
|
|
|
50. |
+அரசர்
விருத்தங் கலித்துறை யீரைந்து கண்மூலைமேற்
பரசி னயனம் பயோதரஞ் சேர்ந்த விருத்தமென்ப
வரன்முறை சுற்றத் தளவாம்பொன் னூசல் வடிவுதுற்றே
உரைசெய் கலித்தா ழிசையேபொன் னூசலென் றோதுவரே. |
(உரை II).எ - ன், நயன விருத்தமும்
பயோதர
விருத்தமும்................
ஆசிரிய விருத்தம் பத்தாற்றான், கலித்துறை பத்தாற்றான்
நயனத்தைப் புகழ்ந்தது நயனப் பத்தாம்; பயோதரத்தைப் புகழ்ந்தது
பயோதரப் பத்தாம். ஊசலுறுப்பு வந்தன செய்து சுற்றத்தளவாம்
கலித்தாழிசை பொன்னூச லென்றவாறு.
(கு - ரை). அரசர்
விருத்தம் - ஆசிரிய விருத்தம்; ஆசிரியம்
அரசர்க்குரிய பா ஆதல் அறியத்தக்கது. பயோதரம் -
பாலைத்தரித்துள்ளது;
நகில்; காரணக் குறி. சுற்றத் தளவாம் என்றது சுற்றம்
பொலியச் சுகமொடு வாழ்கவென்று கூறும் மரபுபற்றி என்க.
இவ்வாசிரியர் ஊசல் கலித்தாழிசையால் வரும் என்றாரேனும்
பிறபாட்டியல்களின் ஆசிரியர்கள் ஆசிரிய விருத்தத்தாலும் வரும்
என்று கூறுவர். ஆடிரூசல், ஆடாமோ ஊசல் என்ற தொடர்களில்
ஒன்று ஈற்றில் அமைதலுண்டு. (25)
|
|
|