|
கோவை,
நாழிகைக் கவி
|
|
|
54. |
பொருளதி
காரத் 1திறத்தைப் புகன்று கலித்துறைகள்
வருவது நானூறு கோவையென் 2றாகுமவ் வானவர்க்கும்
அரசர் தமக்கு மறிய உரைத்த 3கடிகைகளை
உரைசெய்யுண் முப்பத் திரண்டுவெண் பாவென ஓதுவரே. |
(உரை I). எ - ன், கோவையும் நாழிகைக் கவியும் உணர்த்........று.
(இ - ள்), அகப்பொருளையுடைய நானூறு கலித்துறை
[யாக்குவன விதத்தால் வளப்படுத்த] கோவையாகும்; அவை அரசர்
கோவை, பாண்கோவை போல்வன. அரசர்க்கும் வானோர்க்கும்
உரைக்கும் கடிகைகளை முப்பதிரண்டு வெண்பாவினால் உரைப்பது
நாழிகைச் செய்யுளாம் எ - று.
(உரை II). எ - து, பொருளதிகாரத்துட்
பிரமம், பிராஜா
பத்தியம், ஆரிடம், தெய்வம், காந்திருவம், அசுரம், இராக்கதம்,
பைசாசம் என்று சொல்லப்பட்ட எட்டுவகை மணத்தினுள் காந்திருவ
மணத்தில் நானூறு கலித்துறை பாடுவது கோவையென்று வழங்கப்படும்
; வெண்பா முப்பத்திரண்டு பாடுவது கைக்கிளை யென்று
வழங்கப்படும் எ - று.
(கு - ரை). அரசர் கோவை, களவியற்காரிகையுரையில்
அரையர்கோவை என்னும் ஒரு நூற் பெயர் காணப்படுகின்றது.
நாழிகைச் செய்யுள், நாழிகைக்கவி, நாழிகைவெண்பா, கடிகை
வெண்பா என்பன ஒரு பிரபந்தத்தையே குறிப்பனவாகும்.(29)
(பி
- ம்.) 1 தறத்தை 2 றாகுவ 3
படிகைக்கிளை .
|
|
|