|
மருட்பாப்
பிரபந்தம்
|
|
|
55. |
புறநிலை
வாயுறை வாழ்த்துப் 1புவியில் ஒருவன்செவி
யறிவே யுறுத்த லகப்புறக் கைக்கிளை ஆனவிந்த
நெறியிற் பொருள்களை யன்றி மருட்பா நிகழ்த்தலினால்
அறியவிந் நாற்செய்யு ளல்லாத பாவினும் ஆமென்பரே. |
(உரை
I). எ - ன், மருட்பாவுக்குரிய பொருள்
ஆமாறுணர்த்..............று.
(இ - ள்).புறநிலை
வாழ்த்து, செவியறிவுறூஉ, கைக்கிளை,
வாயுறை என்னும் நான்கு பொருளின் மேலும் மருட்பா வரும்
என்பதூஉம், இப்பொருண்மேற் பிற செய்யுளும் வருமென்தூஉம் ஆம்
எ - று.
(உரை II). மருட்பாப்
பிரபந்தம் பாடுமிடத்துப் புறநிலை
வாழ்த்து மருட்பாவும் கைக்கிளை மருட்பாவும் வாயுறை வாழ்த்து
மருட்பாவும் செவியறிவுறூஉ மருட்பாவும் என்று நான்கு வகை
மருட்பாவினாலும் பாடப்படுவது மருட்பாப் பிரபந்தமென்று
வழங்கப்படும் எ - று.
இது பாடுமிடத்துத் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும்
முடிபுனைந்த மன்னர்களுக்கும் பாடலாம். குறுநில மன்னருக்கும்
குடும்ப சகிதமாயிருக்கிறவருக்கும் பாடலாகாது.
(பி - ம்.)
1 புலமில் (30)
|