|
பரணி
|
|
|
56. |
புறநடை
சேர்குர வைப்பொருண் மேலிங் கிருவர்மன்னர்
திறனுடை யானைப் படைசெற்று வென்ற ஒருவன் செய்கை
நெறிபடு நேரடி யேமுத னீண்டன ஈரடியாய்ப்
பெறலருந் தாழிசை யாற்பர ணிப்பெயர் பேசுவரே. |
(உரை
I). எ - ன், பரணி ஆமாறுணர்த்..........று.
(இ - ள்). இருவர் வேந்தர் யானை
பொருத வெற்றி ஒருவன்
செய்கிற புறநடைசேர் குரவைமேல் நேரடி முதலான சீர்களின்
இவ்விரண்டடியாய்த் தாழிசையான் வருவது பரணியாம் எ - று.
(உரை II). இரண்டு முடிபுனைந்த மன்னர்
தங்களிலே
மாறுபாடாகி யுத்தம் பண்ணின யுத்த பூமியிலே வெற்றி மேற்கொண்டு
ஆயிரம் யானையைக்கொன்று சகல பல சங்காரம் பண்ணச்
சயங்கொண்டு முடிபுனைந்த மன்னவனுக்கு ஈரடித் தாழிசையாக
எண்ணூறு தாழிசை பாடுவது பரணியென்னும் பிரபந்தம் என்று
வழங்கப்படும் எ - று. (31)
|