இதுவுமது
   
64. விருப்பந் தருஞ்சுவை பாவ 1விகற்ப மிகுபாக்களால்
உரைத்த வினத்தா லுரையோ டுடன்பட மெல்லவந்து
சருக்க மிலம்பக மாம்பரிச் சேதமென் னும்பெயரே
தெரித்து வருவது செப்பிய காவியந் தேமொழியே.

     (உரை I).(இ - ள்). ஆன்றோர் விரும்பும் சுவையும்
பாவவிகற்பமும் என்னும் அலங்கார முடைத்தாய்ப் பாக்களாற்றான்
இனங்களாற்றான் உரையோடு பாடை விரவித் தான் வருவது சருக்க
மிலம்பகம் பரிச்சேத மென்னும் கூறுபாட்டையுடைத்தாய் ஒரு பெயரும்
தெரியவரும் பெருங்காப்பியம் எ - று.

     (கு - ரை).
சருக்கம் முதலியன நூலின் பிரிவுகள் : காண்டம்
படலம் முதலியனவும் கொள்ளுக.


     (பி - ம்.) 1 ‘விளக்க’ (39)