|
இசைச்செய்யுட்
டிறம், இவ்வியலுக்குப் புறநடை
|
|
|
68. |
பாவா
னவையிசை தம்மிற் பயிறலப் பாவினத்தில்
தாவாத வெண்செந் துறைசந்தந் தாண்டகம் 1தாமனைத்தும்
மேவாத வல்ல வினைப்பாத் தமிழ்2 வெற்பின் வேதமுனி
நாவார் 3தமிழ்நடைக் கேபுணர்த் திக்கொள்க நன்னுதலே. |
(உரை
I) எ - ன், இசையுடன் வரும் செய்யுட்டிறமும்
இவ்வோத்திற்குப் புறநடையும் ஆமாறு உணர்த்.....று.
(இ - ள்), பா நான்கும் இசையொடு பயின்று,
பாவினங்களுள்ளும் வெண்செந்துறைமேல் சந்தமும் தாண்டகங்களும்
பயின்று வருவனவாம். வண்ணத் துறையாக நின்ற செய்யுள் மேல்
வரும் பொருட்டிறம் உள்ளனவும் பிறவும் திருமுது பொதியிற் றெய்வ
முனிவர் அருளிய பாவியல்களும் பாட்டியல்களும் வந்தனவெல்லாம்
முறையே அறிந்து கொள்க எ - று.
சந்தம்
தாண்டகம் வெள்ளைச் செந்துறை
இன்னவை யின்றி யமைந்த விசைத்திறம்
எல்லாம் பாவினத் தியன்ற வன்றே |
என்பது மாமூலம்.
இசையினுட்
பாக்க ளியலா வாயின்
இசைத லிற்றென வுரைக்கவும் படுமே |
என்பது செய்யுள் வகைமை.
அஃதேல் கவிப்பாவெல்லாம் தேவபாணியென இசையோடு
புணர்ப்பரன்றோவெனின், அவை இன்று வேண்டாத
ஆசிரியப்பாட்டாக்கி உரைக்கும் எ - று.
(பி
- ம்) 1 தாமமைந்த 2 வெற்புடன்
வேதமுள்ள 3
தமிழ்நடை தன்னை யுணர்ந்துகொள் (43)
|