|
பொதுப்பாயிரம்
தற்சிறப்புப்பாயிரம்
|
|
|
69. |
ஈவா
ரியல்பிவை யீகை மூறைமை இவையுணர்தல்
ஆவார் திறமிவை கேளாய லாதியிந் நாற்பகுதி
1தாவா துரைத்தல் பொதுப்பா 2யிரந்தனி வானவரை
ஓவா திறைஞ்சி யதிகார முன்ன ருரைப்பர்களே.
|
(உரை I). எ - ன், பொதுப்பாயிரமும் சிறப்புப்பாயிரமும்
உணர்த்..........று.
(இ - ள்.) ஆசிரியரது இயல்பும், அவர்
உரைக்கும் முறைமையும், மாணாக்கரது இயல்பும், அவர் கேட்கும் முறைமையும்,
என்னும் நான்கினையும் உரைப்பது பொதுப்பாயிரமாம்; தெய்வ
வணக்கமும் செயப்படு பொருளும் ஆமாறு செப்புதல் சிறப்புப்
பாயிரமாம் எ - று.
ஈவோன்
றன்மை ஈத லியற்கை
கொள்வோன் றன்மை கோடன் மரபென
ஈரிரண்டென்ப பொதுவின் றொகையே |
என்றாராகலின்.
வணக்கம் அதிகாரம்
என்றிரண்டும் செய்யச்
சிறப்பென்னும் பாயிரமாம். |
ஈவோன்றன்மை முதலாகச்
சொல்லப்பட்ட நான்கிற்கும் முறைமை
கண்டு கொள்க.
(உரை II). எ - து, நூலுரைக்கும் ஆசிரியன்
இயல்பும்
..............................நூல் கற்கு முறைமையும் உரைப்பது பொதுப்பாயிரமாம்.
முன்னர் வணக்கம் உரைக்கப்படும்எ - று.
(கு - ரை). உணர்தல் ஆவார் - மாணாக்கர்.
கேள் ஆயல் -
ஆசிரியர் வாயிலாகக் கேள்வியை ஆராய்தல் ; கேட்கும் முறைமை
என்றபடி ; கேள்; முதனிலைத் தொழிற் பெயர். இவற்றுடன்
நூலையுங்கூட்டி நன்னூலார் பொதுப்பாயிரம்
ஐந்தென்பர்.
(பி
- ம்). 1 ஓவாது 2 யிரந்தனில்
வானவரை 3 ஓவா
திறைஞ்ச லாதிகார முன்ன ருரைப்பர்களே
|