சிறப்புப்பாயிர இலக்கணம்
   
70. +செய்தான் செயப்பட் டதுசெய் பொருளது செய்திறத்தோ
டெய்தும் பயனின்ன தன்வழி யெல்லை எனவொரெட்டும்
ஐயமில் கால மவைகா ரணமாகப் பத்தொடொன்றும்
மெய்தெரி யிற்சிறப் புப்பா யிரமென்ன வேண்டுவரே.

     (உரை I)
எ - ன், நூற்கருவிப் பொருளும், அது தொகுத்தல்
விரித்தல் தொகைவிரி யென்னும் செய்திறமும், கேட்போரும், பயனும்,
இன்னதன் வழித்து என்றலும், இன்ன எல்லையுள் நடக்கும் என்றலும்,
மேலொருசார் இன்ன காலத்து இன்னான் அவைக்கண் இன்ன
காரணமாக என்னும் மூன்றுடனாகப் பதினொன்றும் என்பவையிற்றை
உரைத்தல் சிறப்புப் பாயிரமாம் எ - று.

“வருவது மொழிதல் கடவுளை யேத்துதல்
....சிறப்புப் பாயிர மென்ப.”

இப்படிச் சொல்லும் ஒரு சாரார் கருத்தும் அறிக.

     (கு - ரை). இச்சூத்திரமும் அடுத்த சூத்திரமும் ஒரு
பொருளன. காலம், அவை, காரணம்; அவை-நூல் அரங்கேற்றப்
பட்டசபை. (2)