நூலின் இயல்பு
   
72. முதல்வழி 1சார்பென மூவகைத் தந்திரம் சூத்திரமும்
உதவு 2விருத்தி யுயர்தரு மம்முதல் நான்கேழ்வரை
மதவிகற் பம்பத்துக் குற்றத்துத் தீர்ந்துபத் துக்குணத்தின்
நுதலும் பதின்மூன்றுள் முப்பத் திரண்டுள 3நூனெறியே.

     (உரை I), எ - ன், நூல் ஆமாறு உணர்த்...........று,

     (இ - ள்.) தந்திரம் சூத்திரம் விருத்தி என்னும் மூன்றும்,
அறம் பொருள் இன்பம் வீடென நான்கும், எழுவகை ஆசிரிய
மதவிகற்பமும் உடைத்தாய்ப் பத்துவகைக் குணத்தான் பதின்மூன்று
வகையான் உரைபெறினும் முப்பத்திரண்டு தந்திரவுத்தியொடு
புணர்ந்தது நூலாம்.

     அந்நூல் முதனூல், வழிநூல், சார்புநூல், [எதிர் நூல்] என்னும்
கூறுபாட்டான் ஆம் எ - று.

“அவற்றுள்
வினையி னீங்கி விளங்கிய வறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்.”
“முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பங் கூறின்
அழியா மரபினது வழி நூலாகும்.”
“இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
திரிபுவே றுடையது புடைநூ லாகும்.”
“தன்கோள் நிறீஇப் பிறர்கோள் மறுப்பது
எதிர் நூல் என்பர் ஒருசா ரோரே.”

[இவற்றான் நூலாதல்]

“இற்றகுமின்ன பகுதியி னிவற்றா
லென்ன வன்னுறுப் பானது தந்திர மாகும்.”

     சூத்திரம் ஆறுவகைப்படும் (பெயர்ச்சூத்திரம், விதிச் சூத்திரம்)
விலக்கியற்சூத்திரம், (நியமச்சூத்திரம்) அதிகாரச்சூத்திரம்,
(ஞாபகச்சூத்திரம்) இவையும் தந்திரவுத்தியுள்ளேயடங்கும் எ - று.

     ஒருசார் ஓர்புடைப் பொருளெல்லாம் தோற்றச் சூத்திரம்
நடத்தலிற் சூத்திரம் ஆறுவகைப்படும் என்பதாம்.

அவைதாம்:


.............................................................................
“வெண்பா வகவல் அல்லன பிறவும்
வெள்ளைக் குறட்சிறப் பல்லன வரையார்.”

“ஓரடி முதலாப் பொருண்முடி வரையாம்
பிறர் நூற் காட்டினும் வரையா ராண்டே,”

“வஞ்சியும் கலியும் வரையல் வேண்டும்.”
“உரை யெனப் படுவ துணருங் காலைக்
கருத்தே கண்ணழிவு தாரணம் பொழிபொருள்
அகலம் நுட்பமென் றாங்ஙன முடிய
உணர்த்தும் சொல்வகுத் துரைத்தபின்
எழுத்தெழுத் தாகப் பொருள் தெரிந்து
சூத்திரம் படலம் பிண்டமென் றவற்றான்
யாப்புற வகுத்த நூற்பொருள் வழாமை
நோக்கொடு மாறுகோள் ஏற்புழி யறிந்து
முதல்நடு விறுதி உரைமாறு படாமை
நிரல்நிறை சுண்ணம் அடிமறி யாற்றொழுக்
களைமறி பாப்புவிற் பூட்டுத் தாப்பிசை
கொண்டுகூட் டாகிய வகையால்
ஏற்பக் கூறல் உரையெனப் படுமே.”

“வடமொழி கூட்டினும் வரையா ராண்டே.”

“................ ................. .............. ................
வேற்றோர் மதமேற்கொண்டு களைதல்
தாஅ னாட்டித் தனாஅது நிறுத்தல்
இருவர் மாறுகொண் டொருதலை துணிதல்
பிறர் நூற் குற்றங் காட்டல் (ஏனைப்)
பிறிதுடன் படாமே தன்மதம் வகுத்தல்.”

“............ ........... ........... ............
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்று சோர்ந்திறுதல் நின்றுபய னின்மை
......... ............. ............ ..............”

எனவிவை, பத்துவகைக் குணமாவன.

“சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க் கினிமை நன்மொழி யுரைத்தல்
ஓசை யுடைமை ஆழ முடைத்தாதல்
உலக மலையாமை முறையின் வைத்தல்
விழுமியது பயத்தல் விளங்கிய வுதாரணம்”

என இவை, பதின்மூன்றுவகை உரையாவன:

“சூத்திரம் தோற்றல் சொல்வகுத்தல்
சொற்பொரு ளுரைத்தல் வினாவுதல் விடுத்தல்
விசேடங் காட்டல் உதாரணங் காட்டல்
ஆசிரிய வசனங் காட்டல் அதிகார வரவுகாட்டல்
தொகுத்து முடித்தல் விரித்துக் காட்டல்
துணிவு கூறல் பயனொடு முடித்தல்”

என இவை. முப்பத்திரண்டு தந்திர வுத்தியாவன;


“நுதலிப்புகுதல் ஓத்துமுறை வைத்தல்
தொகுத்துக் காட்டல் வகுத்துக் காட்டல்
முடிவிடங் கூறல் முடித்துக் காட்டல்
தானெடுத்துக் காட்டல் ஒப்பின் முடித்தல்
பிறன்கோட் கூறல்..........
இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல்
எடுத்த மொழியின் எய்த வைத்தல்
இன்ன தல்ல திதுவென மொழிதல்
எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல்
மாட்டெறிந் தொழிதல் ....... ........
பிறர்நூன் முடித்தது தானுடன் படுதல்
தன்குறி வழக்கம் மிகவிரித் துரைத்தல்
இறந்தது விலக்கம் எதிரது போற்றல்
முன்மேற் கோடல் பின்னது நிறுத்தல்
எடுத்துக் காட்டல் முடிந்தது முடித்தல்
சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்
தொடர்ச்சொல் புணர்த்தல் யாப்புறுத் தமைத்தல
..........உரைத்து மென்றல்
விகற்பித்து முடித்தல் தொடுத்துடன் முடித்தல்
ஒருதலை துணிதல் உய்த்துணர வைத்தல்
உரையிற் கோடல் ............”

எனவிவை.

     (உரை II). எ - து, முதல்நூல் வழிநூல் சார்புநூல் என்று
சொல்லப்பட்ட மூவகை நூலினாலும் எழுவகை ஆசிரிய
மதத்தினாலும் பத்துவகைக் குற்றம் தீர்ந்த குணத்தினாலும் ............
உரைவிகற்பத்தினாலும் ........ முப்பத்திரண்டு வகைத் தந்திர
வுத்தியினாலும் வகுத்து ஏதுவும் மேற்கோளும் எடுத்துக் காட்டும்
மூதுரையுங் கூட்டிப் பெரியோரால் உரைக்கப்பட்டது
பெருநூற்கிளவி
என்ற பெயரதாம் எ - று.

     (கு - ரை). இங்கே வந்துள்ள மேற்கோட் சூத்திரங்களுட் சில
நன்னூலுள சிறிது வேறுபாட்டுடன் காணப்படுகின்றன.

     உரை I - ல் ‘தந்திரம் சூத்திரம் விருத்தி என்னும் மூன்றும்’
என்று பொருள் கொண்டது எதிர்நூலைக் கூட்டிக்கொண்டமையான்
என்க. ‘மூவகைத் தந்திரமும் சூத்திரமும் விருத்தியும் என்று பொருள்
கொள்ளின் எதிர்நூல் என்றதொன்று இங்கே இடம் பெறாமற்
போதலைக் காண்க.

     தந்திரம் - நூல், சூத்திரம் - மூலபாடம், எதிர்நூல்
ஒன்றுண்டென்பது யாப்பருங்கலவிருத்தி முதலியவற்றால் தெரிகிறது.
கண்ணழிபு - பதத்சேதம். பொழிபொருள் - பொழிப்புரை. அகலம் -
விருத்தியுரை. ‘நிரல்நிறை, சுண்ணம் .... கொண்டுகூட்டு’ இவை
பொருள் கோள் : இவற்றின் இலக்கணங்களை
யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கல விருத்தி முதலிய நூல்களிற் காண்க.


     (பி - ம்). 1 ‘சார்பெதிர்’ 2 ‘விருத்தியோ டேது மேற்கோ
ளுரைநான்’ 3 ‘நூல்வகையே’ (4)