இதுவுமது
   
74. ஈதலும் வேட்டலு 1மோதலும் வேதம் இயற்றுவிப்பார்
ஆதலு மங்கி யயனோ 2டுவமை யவரெனவே
ஓதலும் பூசுர ரென்றலு நான்மறை யோர்க்குரிய
போதினும் வெற்பினு நாவினு மேவும் புனையிழையே.


     (உரை I).
எ-ன், உரைத்த வேதியர்க்கு உரிய தொழிலும்
பிறவும் உணர்த்..........று.

     (இ - ள்.) பொருள் கொடுத்தலும், வேட்டலும். வேதம்
ஓதுதலும், ஏற்றலும், வேட்பித்தலும், ஓதுவித்தலும், அக்கினி முகம்
வளர்க்கையால் பிரமனுக்கு ஒக்குமெனப் பெறலும் பூமியிற் றேவர்கள்
என்பித்துக்கோடலும் நான்மறை யோர்க்கு நாட்டப்பட்டன எ - று.

     ஒத்தவை சிறப்புடைய; மற்றவை சிறப்பில.

     (கு - ரை.) இயற்றுவிப்பார்; ஈதல் முதலிய மூன்றையும் தனித்
தனி இயற்றுவிப்பவர்; எனவே ஏற்றல், வேட்பித்தல், ஓதுவித்தல்
என்ற தொழில்களையுடையவர் என்றபடி, அங்கியோடு உவமை
கூறத் தக்கவர்;‘தாம் வளர்த்த கனலே யன்னார்’, ‘தழல்புரை வேதவாணர்’ (வி, பா. 1. 5 :60, உ. 1 : 103).


     (பி - ம்.) 1 ‘மோதலு மாங்க தியற்றுவிப்பார்’ 2 ‘டுவமையு
மல்லவரெண் மாதவர்’ (6)