மன்னவர் இயல்பு
   
75. +பூவை நிலைபக லோன்கழல் போற்றல் புனைதல்முடி
தேவ ருவமைசிங் காசனஞ் செங்கோல் குடைகவரி
காவல் நிகழ்த்த லெரிவேட்ட லோதல் கடலமுதம்
மேவ லடுகளம் வேட்டல்பண் பாயின வேந்தர்கட்கே.

     (உரை I). எ - ன், மன்னவர்க்குரியன இவை யென்பது
உணர்த்..............று.

     (இ - ள்). பூவை நிலையும், ஆதித்தனைப் போற்றலும்,
முடிசூடுதலும், தேவரோடு உவமித்தலும் தெளிதரச் சேவை பண்ணச்
சிங்காதனத்து இருத்தலும், செங்கோன் முறைமையும், வெண்குடை
நிழற்றக் கவரிவீச விரும்பினாராதலும், காவற்றொழிலும், அக்கினி
வேட்டலும், கலைகள் ஓதலும், அமுதுணவுண்டலும், களம்வேட்டலும்
[ஆம் இப்பதினான்கும்] அரசர்க்குரிய வென்றலும் அவரைப் புகழுஞ்
செய்யுளின் வருக (என்றலுமாம்) எ - று.

“இளைய னாயினும் மணிமிடி கவித்தலின்
அரசு தொழி லல்லது பிறிதுதொழில் பெறான்”

என்பது பொய்கையார் கலாவியல்.

     (கு - ரை). பூவை நிலை : பு. வெ. 192. பகலோன்கழல்
போற்றல் : ‘நின்றவெம் பருதி தோற்றந் தொழுதுதம் நியம முற்றி’
(வி. பா. உ. 24) (7)