இதுவுமது
   
76. விளங்கிய நூல்கற்றல் வேத1நெறிநின் றறுசமயம்
உளங்கொண்டு போற்ற லமைச்ச ருரைகொளல்                                     ஓர்ந்துகுடி
தளர்ந்தன தாங்கல் முறைமை கெடாது தனம்பெருக்கல்
அளந்து பெரும்படை 2சேர்த்த லரசர்க் கடுத்தனவே.

     (உரை I). எ - ன், இதுவும் அரசர்க்குரிய தொழில்
உணர்த்...............று.

     (இ - ள்.) வேதாகமநூல் கற்ற வேதியர் நெறியிலே நின்று,
ஆறு சமயத்தையும் பரிகரித்தல், அமைச்சர் உரைத்தவற்றை இகழாது
கொள்ளல், தளர்ந்த குடிகளைத் தாங்கல், முறைமை வழுவாமற்
பொருளீட்டல், காலம் பார்த்து ஆனை தேர் குதிரை காலாள்
கருவிகளைச் சேர்த்துக் கொள்ளுதல் அரசரது இயல்பு எ - று.

     விளங்கிய நூல் கற்றல் என்பது அறுபத்து நாலு கலைகளும்
அறிய உணர்தல் என்றவாறு. இனி, அவரைப் பரவும் செய்யுள்
இயம்பும் வகை அறிந்து புணர்க்க.

     (உரை - II). எ - து, அரசர் ஒழுக்கமாவது அறமென்னும்
அறிவு பிரகாசிக்கப்பட்ட தன்ம சாத்திரங்களும், பொருளென்று
சொல்லப்பட்ட காவிய லட்சணமும் சோதிட சாத்திரம் முதலான பல
சாத்திரமும், இன்பமென்று சொல்லப் பட்ட ஐம்பத்தாறு தேசத்துட்பட்ட
புருஷலட்சணமும் பெண்ணின் லட்சணமும் அவரவர் புணர்ச்சியும்
ஊடலும் பிரிவும் ஓதியறிதல், வீடென்று சொல்லப்பட்ட சரியை கிரியை
யோகம் ஞானம் என்று சொல்லப்பட்டவற்றையறிந்து முறைமை
தவறாமல் நடப்பது அரசர்க்கு அடுத்தது எ - று.

     இந்தக் கவியிற் சொன்ன மற்றத் தொழிலும் உணர்ந்து
கொள்ளுக.


     (பி - ம்.) 1 ‘வேத நெறியின் விளைசமயம்’ 2
‘ தாங்க லரசர்க்’(8)