|
வணிகர்
இயல்பு
|
|
|
77. |
இருபிறப்
1போத லெரிவேட்ட லீதல் இருநிதியம்
வருதிறத் தானல்ல வாணிபஞ் செய்தல் நிரைவளர்த்தல்
பெருநிதிக் கோன்கழல் 2பேண லவனென்று பேசநிற்றல்
உரிமைதப் 3பாவணி கர்க்கியல் பாமென்பர் ஒண்ணுதலே. |
(உரை I).
எ - ன், வணிகர்க்குரியன இவை
என்பதுணர்த்..........று
(இ - ள்). இரண்டு பிறப்பும், ஓதல்,
யாகம், வேட்டல், ஈதல்,
பொருள்வரவாகிய வாணிபஞ்செய்தல், ஆனிரை வளர்த்தல்,
வயிச்சிரவணனைப் போற்றல், அவன் போலென்று சொல்லுவித்துக்
கொள்ளல் வணிகர்க்குரியன எ - று.
(கு - ரை). வயிச்சிரவணன்
- குபேரன். (9)
(பி - ம்.) 1 பாளர் 2 பேணல்
வருவன 3 பாத
வணிகர்க்கியலது
|