இதுவுமது
   
78. உறுவது கோடல் வருபயன் தூக்கல் உழவின்றொழில்
இறுவதஞ் 1சாமை யிடரிற் றெளிதரல் ஈட்டுதற்கு
நெறிபல போதல் முனிவில னாதல் 2நிரைவளையாய்
குறியென லாகுங் குலவணி கர்க்குக் குவலயத்தே.


     (உரை I).
எ - ன், இதுவும் வணிகர்க்குரிய பொருளிவை
யென்பது உணர்த்........று

     (இ - ள்). உறுவது கோடல், வருபயன் தூக்கல், உழவின்
தொழில், இறுவதஞ்சாமை, இடரிற் றெளிதரல், பொருள் தொகுத்தற்குப்
பலவழியும் நடத்தல், முனிவு தவிர்தல் என்னும் எழுவகையும்
வணிகர்க் குரியன. இவை இவரைப் புகழும் செய்யுளின் கண் வருக
எ - று.

     (உரை II). எ - து, வணிகர் அறுவகைத் தொழில்.

     (கு - ரை). இறுவது - நஷ்டப்படுவது. இடரில் தெளிதரல் -
துன்பம் வந்தபோது தேற்றம் கொள்ளல். (10)


     (பி - ம்.) 1 ‘சாம லிடத்திரு மாலடி யேத்திமறை ’ 2 ‘நிரை
வளர்த்தல்’