இதுவுமது
 
61. இன்னுமப் பேய்க 1ளியற்றிய கூழ்பசி தீரவுண்டு
துன்னிநின் றாடுதல் சூழுங் கவந்தங்கள் 2தாமாடுதல்
மன்னும் புறப்பொரு ணூலோர் உரைவழு வாவகையே
முன்னு மொழிந்த படியே புணர்த்திக்கொள்                                 மொய்குழலே.

     (உரை I).
எ - ன், இதுவுமது.

     ஆக்கின கூழைப் பேய்கள் பசிதீர வுண்டு கூத்தாடுதலும்
கவந்தமாடுதலுமன்றி மற்றும் புறப் பொருள் நூல்களிற் புகன்ற
நெறியினையும் அறிந்து இயற்றுக எ - று.
a

“முடிபுனைந்த மன்னர்க் கல்லது
குறுநில மன்னர்க்கு வரையா ராண்டே.”

     (உரை II). எ - து பேய்கள் சமரபூமியிலே ஆக்கின
கூழையுண்டு களித்துக் கவந்தமும் பேயும் பூதமும் தங்களிலே
ஒன்றுக்கொன்று கைகோத்துக் கோவையாக நின்று குரவைக்
கூத்தாடுதலைக் கூறுவது பறந்தலைச் சிறப்புப்பாட்டு எ - று.


     (பி - ம்.) 1 ‘ளியல்கூழ் பசிதீர வுண்டினிதாய்த்’ 2 ‘ஆடுதலிற்
பின்னுஞ் சிறப்புட னங்கடி வைத்தல், பிறவுரைத்தல் பன்னுங்
களிப்பிவை சொல்லுதலாகும் பறந்தலையே.’ (36)