|
வேளாளர்
இயல்பு
|
|
|
79. |
திருந்திய
நல்லறந் தீராத செல்வம் ஒழுக்கமேன்மை
வருந்திய சுற்றத்தை யாற்றுதல் மன்னர்க் கிறையிறுத்தல்
பொருந்திய வொற்றுமை கோடல் புகழும் வினைதொடங்கல்
விருந்து புறந்தரல் வேளாண் குடிக்கு விளம்புவரே. |
(உரை
I). எ - ன், சூத்திரர்க்குரியன இவை யென்றும்
அவரைப் புகழுமிடத்து இவை வரப் பெறுமென்றும் உணர்த்...........று.
(இ - ள்). நல்லறம் புரிதல், செல்வ
முடைமை,
ஒழுக்கமுடைமை, தளர்ந்த சுற்றத்தை யாற்றுதல், மன்னர்க்கு இறை
யிறுத்தல், ஒற்றுமை கோடல், புகழப்படும் கருமத்தைத் தொடங்கல்,
விருந்தோம்பலென்னும் இவை வேளாண்மைப் புகழ்ச்சிக்கு உரிய
எ - று. (11)
|