|
செய்யுள்
செய்வதோர் திறம்
|
|
|
83. |
+சாற்றுத்
தலைவ னியற்பெய ரூர்க்குத் தகவெதுகை
தோற்றினு மப்பெயர் சொல்லுமப் பாகங்கள் துன்னுமச்சீர்
ஏற்ற வெழுத்து வரினு மியைந்த தியற்பெயர்க்கே
ஆற்றும் பொருத்த மனைத்தும் பொருந்துத லாஞ்சிறப்பே |
(உரை
I). எ - ன், செய்யுள் செய்வதோர் திறம் உணர்த்.......று.
(இ - ள்). பாட்டுதை் தலைமகன் இயற்பேர்க்கு
ஆதல்,
அவன் ஊர்ப்பேர்க்கு ஆதல் எதுகைத்தொடையோடு புணர்ப்பினும்,
இவை யிரண்டு பெயர் வைக்கும்படி இவையிற்றின் கண் உளவாகிய
இனவெழுத்து அடிமுதற்கண் தோன்றி நிற்பினும் முன் சொல்லப்பட்ட
பொருத்தம் அனைத்தும் இயற்பெயர்க்குப் பொருந்துதல் சிறப்புஎ - று.
திருவினா சிரியர்
தூக்கிய லுரைத்தன
யாவையு மியற்பெயர்க் கல்லது
பொருத்தம் வேண்டார் புலமை யோரே |
என்பது கல்லாடம்.
இவற்றால் தசாங்கத்திற்கென்று எய்துவித்தன எல்லாம்
இயற்பெயர்க்குப் பொருந்த வைப்பின் ஒழிந்தவையிற்றுக்கு
வழுக்கினும் இழுக்கில்லை எ - று.
(கு - ரை.)பொருத்தவியலில்
இச் சூத்திரம் சிறிது வேறு
பாட்டுடன் காணப்படுகிறது ; சூ .8. (15)
|