|
உறுப்பழிந்த
செய்யுள்
|
|
|
84. |
+தெற்ற வழக்கொடு தேர்ந்துணர் வார்க்கின்பஞ்
செய்தலின்றிப்
பற்றின் வடநூ லெழுத்துக் களேபழை யோருரையின்
மற்றிவை இல்லையென் றோத லுடன்படல் மரபியலாப்
பெற்றி யுடைச்சொற் பழித்த வுறுப்பென்று பேசுவரே. |
(உரை I). எ - ன், ................ந்த செய்யுளாமாறுணர்த்............று.
(இ - ள்). வழக்குடன் மறுதலைத்த மொழி
புணர்ப்பினும்,
விசாரித்து நோக்கி வினாவின்றி யிருப்பினும், வடநூலெழுத்துக்கள்
வரப்புணர்ப்பினும், முன்னுள்ளார்களான் மொழியப்பட்டவற்றுள்
இவ்வாறு வந்தனவில்லை யென்று மாறுபடுமாயினும் மரபியலா வழி
வரும் சொற்புணர்ப்பினும் எறும்பழிந்த செய்யுளாம் எ - று.
முன்புள்ளார் மொழியப்பட்ட குற்றமாமவன ;
மறுவறு
முதல்வன் வகுத்த
அறுவகை மரபின் ஆனந்தமும்
எழுவகைப் பட்ட சொல்வழு வொரீஇ
எழுத்தினும் யாப்பினும் இழுக்கா தாகப்
பாடு கென்றனர் பழமொழிப் புலவர் |
என்பது பருணர்
பாட்டியல்.
உறுபுக ழாகிய
உயர்ந்தோர் கூறிய
அறுவகை யானந்த மாவன
இயனெறி திரிந்த எழுத்தா னந்தமும்
சொன்முறை வழீஇய சொல்லா னந்தமும்
...............................................................................................
தொடைநெறி திரிந்த தொடை யானந்தமும்
நடையறி புலவர் நாடிக் கொளலே.
அவற்றுள்,
இயற்பெயர் சார்த்தி யெழுத்தள பெழினே
இயற்பட லில்லா வெழுத்தா னந்தம்.
இயற்பெயர் மருங்கின் மங்கல மழியத்
தொழிற்சொற் புணர்ப்பது சொல்லா னந்தம், |
இறைச்சிப்
பொருளை யூறுபடக் கிளப்பினும்
புகழ்ச்சிக் கிளவி்யிற் பொருந்தா கூறினும்
உவமைக் காட்சியி னூனந் தோன்றினும்
இவையல பிறவும் இன்னவை வரினே
அவைமொழி யப்பொரு ளானந் தம்மே.
முதற்றொடை மருங்கின் மொழிநிறுத் திருபெயர்
இடைப்படுத் தவ்வழி யிருசீர் படினே
வாய்ப்ப நோக்கி வல்லோர் கூறிய
யப்பா னந்தமென் றறையல் வேண்டும்
தாழா மரபின் யாழொடு புணர்ந்த
பாவகை யொருவனைப் பாடுங் காலைத்
தொடைவகை மரபின் வந்தபெயர் தோற்றி
ஏங்கினு மிடுங்கினும் எழுத்துப்பிரிந் திசைப்பினும்
தூங்கினுங் குழறினுந் தூக்கா னந்தம்.
அளபெடை மருங்கிற் பாடப் படுவோன்
பெயரொடு தொடுப்பிற் பெற்றியின் வாராத்
தொடையா னந்தமெனத்
துணியல் வேண்டும் |
என்பது அகத்தியனா
ரானந்த வோத்து
திணைபால் மரபு
வினாச்செப்புக் காலம்
இடனோடே ழாகு மிழுக்கு |
என்பதனுள் எழுவகைப்பட்ட வழுவும் அறிந்துகொள்க. (16)
|