|
கவி
வகை
|
|
|
87.
|
வாய்ந்த
கவிகம கன்வாதி வாக்கி வகைவனப்பும்
ஆய்ந்தவல் லாக மதுரமுஞ் சித்ரவித் 1தாரமுமே
ஏய்ந்த வகைநான்குங் கள்ளக் கவிமுதல் ஈரிரண்டும்
தேய்ந்த பிறைநுதற் சேயிழை யாயின்று தேர்ந்துகொள்ளே. |
(உரை
I), எ - ன், கவி முதலாகிய புலவர்கள் தன்மை
யறிவுறத் தொகைப்படுத்து அறிவித்தல் நுதலிற்று.
(இ - ள்.) கவி கமகன் வாதி வாக்கி
என்னும் அவரது
தன்மையும், அவருடன் கவிகள் கூறுபாடாகிய ஆசு மதுரம் சித்திரம்
வித்தாரமும், கள்ளக்கவி சார்த்துக்கவி வெள்ளைக் கவி
பிள்ளைக்கவி என்னும் அவர் தன்மை நால்வகையும் நவிலப்படும்
எ - று
ஆசு
மதுரஞ் சித்திரம்வித் தாரமென
நால்வகைப் படூஉம் நன்னெறிக் கவியே.
ஆசு கவியே அறிவெனத் தொடுத்த
எழுத்தினும் பொருளினும் உள்ளுறை யாக
இழுக்கா வண்ணம் யாப்புடைத் தாகும்.
இன்பக் (கவியே) யெல்லைக் குரிய
இன்பம் பயக்கும் யாப்பிற் பொருளின.
சித்திர கவியே மாலை மாற்றொடு
சக்கர முதலிய வரூஉ மென்ப
அகலக் கவியே மங்கல மாலை
கலிவெண் பாட்டொடு களிறே குதிரை
மற்றவை பொருளாற் பிறவுங் காட்டுக
மருங்கின்
நல்லோ ராய்ந்த ஒளியும் பொருளும்
ஒன்பது சுவையும் நால்வகை விருத்தியும்
கூட நோக்கிக் குறித்தொரு வன்மேற்
பாடுஞ் செய்யுட் பாடு வோனே.
சொல்லப் பட்ட எல்லாக் கவியும்
இரண்டு மூன்று நான்கு மூனம்
இல்லா மருங்கிடை ஒருவன் பெறுமே. |
இவற்றால் ஆசு முதலாயின நான்கும் உடன் கண்டு கொள்க.
கள்ளக்
கவியே சார்த்துக் கவியே
வெள்ளைக் கவியே பிள்ளைக் கவியென
நாற்பாற் படுத்தனர் யாப்பியிற் புலவர்.
அவற்றுள்,
கள்ளக் கவியே கவிஞன் றனைமகற்குக்
கள்ளத் தொடுபெயர் களைந்தே யாக்கி
ஒருவர்க் கியம்யும் மாணிலோனே.
சார்த்துக் கவியே முன்னோன் பாடிய
யாப்பின் படிசிறிது தொடுப்போ னென்ப.
வெள்ளைக் கவியே புனமொழிந் தொழுக்கும்
பிள்ளைக் கவியே பின்னிலை நிற்கும். |
|
-பருணர்
பாட்டியல்.
|
இவற்றால் கள்ளக் கவிமுதல் நால்வர்க்கும் இலக்கணங்
கண்டுகொள்க.
..........
............. ............ ...........
.......... ............. ............ ............
வல்ல நூற்பத்துப் பகை யானும்
மதியாது தனது பெருமை யானும்
கல்லாத நூல்களுங் கற்றோர் விரும்பக்
கவிக்கும் நெறியோன் கமக னாகும்.
மேற்கோ ளேது விடைநெறி காட்டி
நாட்டிய வளவை நன்னூல் வழாமைத்
தன்கோள் நிறீஇப் பிறர்கோள் மறுக்கும்
மூதுணர் வுடையோன் வாதி யாகும்.
அறமுதல் நான்குந் திறனிருந்து...........
கேட்போர் சித்தமும் விரும்பக் கிளக்கும்
தோற்ற முடையோன் வாக்கி யாகும்.
|
|
-மாமூலம்.
|
இவற்றால் கவி கமகன் வாதி வாக்கி இலக்கணங் கண்டு
கொள்க.
இச்சூத்திரங்கள் ஓதி, ஒழிந்து நின்றவை கண்டுகொள்க.
(உரை II), எ - து, ..........
ஞாபகம்
செம்பொருள் நடையினெப் பொருளும்
காசின் றுரைப்போன் கமக னாகும்.
ஏதுவும் மேற்கோளும் எடுத்துக் காட்டித்
தனது கோள் நிறுத்திப் பிறர்கோள் மறுப்பவன்
வாதி யென்று சொல்லப் படுமே.
|
மடலூர்ச்சியும் கிரீடையும் விருத்தக்
கதையும் பிரபந்த
விகற்பமும் பாசண்ட நடையும் இயலிசை நாடகத்தொடு தொகுத்துப்
பாடவல்லவன் வாக்கி யென்று சொல்லப்படும்.
மாலைமாற்றுச்
சுழிகுளம் முதலான இருபது மிறைக்கவியும் தேர்ந்து பாடவல்லவன்
சித்திரகவி யென்று கூறப்படும். இத்தன்மைத்தாகிய புலவர் கையில்
கவிதை கொள்ளவும்.
(கு - ரை.) ஆசுகவி
முதலிய நால்வரை. கடுங்கவி,
இன்கவி, அருங்கவி, பெருங்கவி என்று வேண்டுவாரும் உளர்.
ஆசுகவியாவான் தொடுத்த பொருளும், தொடுத்த சூழலும்,
அடுத்த தொடையும் வழுவாமற் கடுத்துப் பாடுவோன். மதுரகவி
யாவான் சொற் செல்வமும் பொருட்பெருமையும் உடைத்தாய்த்
தொடையும் தொடை விகற்பமும் துதைந்து உருவக முதலாகிய
அலங்காரங்களை உட்கொண்டு ஓசைப்பொலிவுடைத்தாய்
உய்த்துணரும் புலவர்கட்கு ஒலிகடலமுதம் போன்று இன்பம் பயக்கப்
பாடுவோன். சித்திர கவியாவான் மாலை மாற்று முதலாகிய
அருங்கவி பாடும் நன்மையையுடையான். வித்தார கவியாவன்
மும்மணிக்கோவையும், பன்மணி மாலையும், மறமும்,
கலிவெண்பாவும், மடலூர்ச்சியு முதலாகிய நெடும்பாட்டும்,
கோவையும், பாசண்டமும், கூத்தும், விருத்தமும், கதை முதலாகிய
செய்யுளும் இயலிசை நாடகங்களோடுங் கலை நூல்களோடும்
பொருந்தப் பாடும் பெருங்கவிஎனக்கொள்க (யா. வி. சூ. 98, உரை.)
வாக்கி யென்பான் அறம் பொருள் இன்பம் வீடுகள்மேல்
கேட்க வேட்கை பிணிக்கச் சொல்லும் ஆற்றலுடைய ஆசிரியன் எனக்
கொள்க.
ஒருவன் பாட்டை அவன் பெயர் களைந்து பிறிதொரு பெயர்
வைத்துக் கொடுப்பவன் கள்ளக்கவி. ஒருவன்
பாடிய யாப்பினால்
அதன் போக்கை மாதிரியாகக் கொண்டு தானும், பாடுவோன்
சார்த்துக்கவி. அற்பமான சொற்களால் கவி தொடுப்போன்
வெள்ளைக்கவி. பிறகவிகளின் சொல்நடை
பொருள்நடை
அலங்காரம் முதலியவற்றைப் பார்த்து அவற்றை மாதிரியாகக்
கொண்டு கவிபாடுவோன் பிள்ளைக்கவி.
(உரை I). இல் கமகன் முதலியவர்களின்
இலக்கணம்
திவாகரத்தை ஒட்டிஎழுதப்பெற்றுள்ளது. (19)
(பி -
ம்.) 1 தாரத்துடன்
|